கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா தெரபி பலன்


கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரின் பங்கு போற்றத்தக்கது. தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு, பகல் பாராமல் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா தெரபி பலன் தரும் என கூறுகின்றனர். தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்களின் ரத்த பிளாஸ்மாவில் வைரசுக்கு எதிரான ஆண்டிபாடி இருக்கும். அதனை வைத்து இந்த சிகிச்சையை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பிளாஸ்மாவை தானம் செய்து உதவி வருகின்றனர். 


கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்வர வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்


* தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது - விஜயபாஸ்கர்


உலகளவில் 1 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு!


உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,00,75,115ஆக உயர்வு; வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 54,53,247ஆக உயர்வு; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,00,626ஆக உயர்வு