சேலம்: சேலத்தில் முதல்வர் பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் படம்பிடித்த அரசு கேமராமேனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்த பிலிம் டிவிசன் கேமராமேனுக்கு தொற்று உறுதியானது.
முதல்வர் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய சென்னையில் இருந்து கேமராமேன் சேலம் சென்றிருந்தார். ஏற்கனவே அரசு பிலிம் டிவிசனை சேர்ந்த ஒரு ஒளிப்பதிவாளருக்கு கொரோனா உறுதியானது.
**************
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,00,973 -ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 40,02,857 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 4,29,956 பேர் உயிரிழந்துள்ளனர்.
****************
சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு அழைத்து வரப்பட்ட 175 பயணிகள் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். சொந்த ஊருக்கு அழைத்து செல்ல பேருந்துக்கு கட்டணமாக ரூ.1,500 வரை கேட்பதாக புகார் தெரிவித்துள்ளனர். திருவாரூர், பெரம்பலூர், போன்ற ஊர்களுக்கு அரசு பேருந்தில் அழைத்து செல்ல ரூ.1,500 வரை கட்டணம் கேட்பதாக கூறுகின்றனர்.
****************