சவக்குழியில் தூக்கி வீசப்பட்டவிவகாரம்

 



கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல், சவக்குழியில் தூக்கி வீசப்பட்ட விவகாரம்- புதுச்சேரி முதல்வர் உத்தரவு!


சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த ஒருவர், புதுச்சேரிக்கு உறவினர் வீட்டுக்கு சென்றபோது திடீரென உயிரிழந்தார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு, மயானத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. முழு கவச உடை அணிந்த பணியாளர்கள் நான்கு பேர் குழிக்குள் சடலத்தை வீசிவிட்டு சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


இது தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், அலட்சியமாக செயல்பட்ட சுகாதாரத்துறையை சேர்ந்த ஒரு பணியாளரும், உள்ளாட்சி துறையில் இரு பணியாளர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.


மேலும், இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.