வெட்டுக்கிளி பிரச்சனையை எதிர்கொள்வது தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே வருகிற 18ஆம் தேதி பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது. தொழிநுட்ப ரீதியான நடவடிக்கைகள் குறித்த பேச்சுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
**************
ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு கட்டணம் செலுத்த பெற்றோரை நிர்பந்திக்கக்கூடாது எனவும், கட்டணம் செலுத்த சொல்லி நிர்ப்பந்திக்கும் தனியார் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
**************
தமிழகத்தில் இன்று முதல் திருச்சி-செங்கல்பட்டு, அரக்கோணம்-கோவை ஆகிய இரண்டு வழித்தடங்களில் 3 சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டன.
***********************
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவிலில் உள்ளூர் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
*********************
ஆஸ்திரேலியாவில் விளையாட்டு போட்டிகளை காண சிறிய அரங்குகளில் 10,000 பார்வையாளர்கள் வரை அனுமதிக்கப்படுவர் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.
**********************
லடாக் எல்லையில் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகளை சீனாவும், இந்தியாவும் எடுத்து வருவதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.