செய்திகள்-வெற்றி தின விழா


கொரோனா பரவலுக்கு நடுவே இரண்டாம் உலகப் போர் வெற்றிக் கொண்டாட்டம் நடத்தும் ரஷ்யா


75வது ஆண்டு வெற்றி தின விழா:


இரண்டாம் உலகப் போரில் நாஜி படைகளை சோவியத் ஒன்றியம் (இன்றைய ரஷ்யாவை உள்ளடக்கியது) வீழ்த்தி 75 ஆண்டுகள் ஆகிறது. இந்தப் போரில் ஏறத்தாழ 2 கோடி சோவியத் ஒன்றிய வீரர்கள் பலியானார்கள். இந்தப் பேரணியை நடத்துவதற்காக கொரோனா காரணமாக விதிக்கப்பட்டிருந்த சமூக முடக்கத்தை ரஷ்யா இந்த மாதம் தளர்த்தியது.


2ஆம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜிப் படையை ரஷ்யா வென்றதன் 75வது ஆண்டு வெற்றி தின விழா இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்திய ராணுவத்தின் படைப்பிரிவும் பங்கேற்று மிடுக்கான அணிவகுப்பு நடத்தியது. 


இரண்டாம் உலகப் போர் வெற்றிக் கொண்டாட்டம்: செஞ்சேனையின் முக்கிய படைக்கலனாக விளங்கிய வின்டேஜ் டி-34 டேங்குகளை மாஸ்கோ வீதிகளில் இயக்கப்படுகிறது.