பேராசிரியர் அன்பழகன் மகள் மரணம்;


செய்திப்பிரிவு


பேராசிரியர் அன்பழகன் மகள் மரணம்; திமுகவினர் அஞ்சலி


மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் மகள் டாக்டர் மனமல்லி உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.


திமுகவின் பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன் முதுமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த மார்ச்7-ம் தேதி காலமானார். அவருக்கு அன்புச்செல்வன் மகனும் டாக்டர் மனமல்லி உள்பட இரண்டு மகள்களும் உள்ளனர்.


இந்த நிலையில், அன்பழகன் இறந்து சில மாதங்களிலேயே அவருடைய மகள் டாக்டர் மனமல்லி உடல்நலக்குறைவு ஏற்பட்டு இன்று காலமானார்.


அவரது மறைவு செய்தியை அறிந்த திமுக எம்.பி. கனிமொழி நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.