சென்னையில் மே 23 முதல் ஜூன் 11 வரை கொரோனா தொற்று உறுதியான 277 பேர் மாயம் - மாநகராட்சி
* தவறான முகவரி, செல்போன் எண்களை தந்த 277 பேரை கண்டறியும் முயற்சியில் போலீசார் தீவிரம்.
****************************************
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர் மரணம்.(கொரோனா உயிரிழப்பு)
* 54 வயதான செவிலியர் தொற்று உறுதியான நிலையில் உயிரிழப்பு. மார்ச் மாதத்தில் முதல்முறை தொற்று ஏற்பட்ட போது சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார்
**************************************
தமிழகத்தில் மேலும் 1974 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இன்று 1974 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,661ஆக உயர்வு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 38 பேர் உயிரிழப்பு
* இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 435 ஆக உயர்வு- * கடந்த 4 நாட்களில் மட்டும் 109 பேர் மரணம் 450-ஐ நெருங்கியது கொரோனா உயிரிழப்பு - தமிழக சுகாதாரத்துறை தகவல்
************************************
உலகமே கொரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் வேளையில், கேரளாவில் ஒருவர் 'கொரோனா தேவி' சன்னதி அமைத்து அதனை வழிபடத் தொடங்கியுள்ளார்