முக்கிய செய்திகள்


நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை பிடித்த போலீசார்


* கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் என தகவல்  * 108 அவசர தொலைபேசி அழைப்புக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்திருந்தார்  வெடிகுண்டு மிரட்டல் - மாணவனிடம் விசாரணை : 


* தனது போனில் அழைப்புகள் எதுவும் போகாத நிலையில் 108க்கு போன் செய்த மாணவன்- * மாணவனுக்கு சற்று மனநலம் பாதிப்பு எனவும் விசாரணையில் தகவல்


*********************


புதுச்சேரியில் மேலும் 15 பேருக்கு கொரோனா..! 


புதுச்சேரியில் மேலும் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 286ஆக அதிகரிப்பு


இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 13,586 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது


* 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 336 பேர் உயிரிழப்பு  - மத்திய சுகாதார அமைச்சகம்


**********************


3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விடுவிப்பு: 


* சந்திரசேகர், வெங்கடேஷ், அனீஷ் சேகர் உள்ளிட்ட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிப்பு. சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிப்பு


* புதிதாக 3 அதிகாரிகள் நியமனம்  - தமிழக அரசு


* ஏற்கனவே 3 அதிகாரிகள் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிப்பு


* மணிகண்டன், பிரபுசங்கர், அமுதவல்லி ஆகிய 3 அதிகாரிகள் புதிதாக நியமனம்


***********************


சென்னையில் 12 நாள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது


முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையொட்டி வழக்கத்தைக் காட்டிலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்றைக்கு இரண்டு மடங்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


********************


"விடுப்பு எடுப்போர் காவல் துறைக்கு தேவையில்லை" - துணை ஆணையர்


**********************


சீனாவுடனான மோதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீர‌ர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ இரங்கல்


மூன்று நாட்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு சீன ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட 10 இந்திய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


*************************