சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு


 


தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நேற்று காலை ஆய்வு செய்தார். 


தமிழகத்தில் மட்டும் இதுவரை, 40 ஆயிரம் பேரை, எவ்வித மருந்தும், ஊசியும் இல்லாமல், குணப்படுத்தியுள்ளோம்.


தமிழகத்தில் தான், குறைந்த இறப்பு விகிதத்தை பராமரித்து வருகிறோம். விலை உயர்ந்த வீரியமிக்க மருந்துகளை, தமிழ்நாடு மருத்துவ கார்ப்பரேஷன் மூலம் வரவழைத்து, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பியுள்ளோம்.


தமிழகத்தில் போதிய அளவிற்கு, மருந்துகள் கையிருப்பு உள்ளது. அது போன்று, பி.பி.இ., மாஸ்க், கையுறை, கிருமி நாசினிகள் தொடர்ந்து தட்டுப்பாடின்றி கிடைக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு, கூடுதலாக டாக்டர்கள், பணியாளர்கள், டெக்னீஷியன்களை நியமிக்க, முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இவ்வாறு, பின்  செய்தியாளர்களிடம் கூறினார்


 கர்நாடகா மாநிலத்தில் புதிதாக 445 பேருக்கு கொரோனா உறுதியாகிய நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,005 ஆக அதிகரித்துள்ளது.  மேலும் 246 பேர் இன்று  குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 6916 ஆக உயர்ந்துள்ளது.