64 திருவிளையாடல்- சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை


 இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை... – நீஇருக்கையிலே எனக்கேன் பெருஞ் சோதனை  இறைவா…

இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை... – நீஇருக்கையிலே எனக்கேன் பெருஞ் சோதனை  இறைவா…
இன்று நான் கேட்ட ஒரு பழைய பாடல்...
என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது ..!
.
“இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை..”
.
எத்தனையோ ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கும் "திருவிளையாடல்" படப் பாடல்தான் இது ..!


ஆனால் இன்று ஏனோ....இந்தப் பாடலின் ஒரு சில வரிகள், என்னை அறியாமலேயே ,மீண்டும் மீண்டும் உள்ளத்தின் உள்ளே ஓடி வந்து உட்கார்ந்து கொண்டு...அர்த்தம் தெரிந்து கொள்ள என்னை அழைத்தன..!
.
சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ -

# பாடலின் இடையில் வரும் வரிகள் இவை ...!
.
இத்தனை வருடங்களாக இந்த பாடல் வரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே....அது என்ன சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை..?
.
அந்தக் காலத்தில்....காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன்


அவன் பெயர் அரதன குப்தன் .மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு , மதுரையிலேயே வாழ்ந்து வந்தானாம்...
.
காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த , அவன் தங்கைக்கும் , தங்கையின் கணவருக்கும் தங்கள் மகள் ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை.
.
எதிர்பாராமல் ஒரு நாள் , அரதன குப்தனின் தங்கையும் , அவள் கணவரும் இறந்துவிட்டதாக காவிரிபூம்பட்டினத்திலிருந்து தகவல் வர .
உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு , திரும்பும்போது தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான் .
.
வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்திலே... ஒரு புன்னைவனம் ..
அதில் ஒரு வன்னிமரம் ..அருகில் ஒரு சிவலிங்கம்..சற்றுத் தள்ளி ஒரு கிணறு...


கட்டுசோறை பிரித்து சாப்பிட்டு விட்டு அங்கேயே தங்கி விட்டார்கள் இருவரும்..!
.
காலையில் கண் விழித்த ரத்னாவளி பதறிப் போனாள்... கதறி அழுதாள் ...
காரணம்...?  அசைவற்றுக் கிடந்தான் அரதன குப்தன்...
.
நள்ளிரவில் நல்ல பாம்பு வந்து கடித்திருக்கிறது....!
.
தற்செயலாக அந்த வழியாக வருகிறார் திருஞானசம்பந்தர் ....
.
நடந்ததை அறிந்து அவர் , ஈசனிடம் முறையிட.உயிரோடு எழுந்தான் அரதன குப்தன்...
.
சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் ரத்னாவளியிடம் கேட்டுப் புரிந்து கொண்டாராம் சம்பந்தர்.


அப்புறம் சொன்னாராம் : “ஈசனுக்கு முன்பாகவே இந்தப் பெண்ணுக்கு ஒரு தாலியைக் கட்டி ,இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ.”
.
மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன்..
இந்த கல்யாணத்திற்கு சாட்சிகள் ..அங்கே இருந்த ஒரு வன்னிமரமும், கிணறும் , சிவலிங்கமும்தான் ...!
.
இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள்.கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி , கொதித்துப் போனாளாம். ரத்னாவளி நடந்த விஷயங்களை , உள்ளது உள்ளபடியே சொல்ல. அதை கொஞ்சமும் நம்பவில்லையாம் முதல் மனைவி..!
.
வழக்கு சபைக்கு வந்தது...திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்டார்கள்.
“மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி..” என்று கூறினாள் ரத்னாவளி...
முதல் மனைவி கேலியாக கேட்டாளாம் இப்படி ஒரு கேள்வி : .. “ஓஹோ...அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா?”
.
கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்....
கூனிக்குறுகிப் போன ரத்னாவளி , கைகூப்பி அழுதாள் .தொழுதாள்....!
.
கண்களில் கண்ணீர் வடிய கதறினாளாம் ரத்னாவளி. “ஈசனே...இது என்ன சோதனை..? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்..? சொல் இறைவா..சொல்.?”
ரத்னாவளி பெரும் குரல் எடுத்து கதறி அழ ...அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல் :"நாங்கள் சாட்சி.."
.
குரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்க்க....
ஈசன் அங்கே எழுந்தருளி நின்றாராம்..!
.
“ ஆம்...இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான்...
ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக ,கல்யாணம் நடந்த இடமான திரும்புறம்பயத்தில் இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் , இன்று முதல் ,இந்த மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் ‌சாட்சியாக இருக்கும்..” என்று சொல்லி மறைந்தாராம் ஈஸ்வரன்...!
.
பார்த்தவர் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்களாம்..!
.
இப்போதும் , மதுரையில் சுவாமி சன்னதிக்கு வெளி பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில். வன்னி மரம் , கிணறு, சிவலிங்கம் ஆகியவை இருக்கிறதாம்..!


.நீங்கள் பார்த்திருக்கிறீர்களா...?
.
ஏற்கனவே மதுரை கோவிலுக்கு அடிக்கடி நான் போயிருக்கிறேன் ... ஆனால் அப்போது இந்தக் கதை தெரியாததால் கவனிக்கவில்லை..!
இனி போகும்போது தேடிப் போய்ப் பார்க்க வேண்டும்..!
.
கும்பகோணத்திலிருந்து சாட்சி சொல்ல மதுரை சென்றதால் “சாட்சி நாதர்” என்றும் “ஸ்ரீ சாட்சிநாதசுவாமி” என்ற பெயர் கிடைத்ததாம் திரும்புறம்பயம் கோவில் சிவனுக்கு!
.
கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தூரத்தில் இந்த திரும்புறம்பயம் ஸ்ரீ சாட்சிநாதசுவாமி கோவில் இருக்கிறதாம்..!
.
தென்னாடுடைய  சிவனே  போற்றி  


எந்நாட்டவர்க்கும்  இறைவா போற்றி 


பக்தியுடன்    மோகனா  செல்வராஜ்.