குறுஞ் செய்திகள்- அனுமதி பெறாமல் திருமணம்

 



பூண்டி நீர்த்தேக்கத்திற்கு ஆந்திராவில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம். கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 15 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. தண்ணீர் திறப்பை ஆந்திர பொதுப்பணித்துறை முற்றிலும் நிறுத்தி உள்ளது.


பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80.63 அடியாக உள்ளது.  அணையின் நீர் இருப்பு 16 டி.எம்.சி-யாக உள்ளது


மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி



மேற்குவங்கத்தில் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு....! கொரோனா தாக்கம் அதிகரிப்பால் முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி



 

2019-20ம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 2018-19ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்ய வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து நேரடி வரிவிதிப்பு ஆணையம் அறிவித்துள்ளது.

 

மக்களின் பணம் சுருட்டப்படுவதை தடுக்க, கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

இந்தியாவில் மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இணையதள மோசடியாளர்கள் தற்போது கோவிட் 19 விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு பணிக்காக அரசு நிதி உதவி மற்றும் நிவாரண உதவி பெற்றுத்தருவதுபோல் நடித்து பொதுமக்களையும், தொழில் நிறுவனங்களையும் ஏமாற்றி ேமாசடியில் ஈடுபட்டு வருகின்றனர். 

 


 

பட்டாளம் கான்ரான்ஸ்மித் நகரில் உள்ள தேவிகருமாரியம்மன் கோயிலில் 100க்கும் மேற்பட்ட உறவினர்கள் முன்னிலையில் தனிமனித இடைவெளி உள்ளிட்ட எந்த வித அரசு உத்தரவையும் கடைபிடிக்காமல் விஜய், நந்தினி என்ற தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது. திருமண வீட்டாருக்கு ₹5000 அபராதம் விதித்த மாநகராட்சி கலந்து கொண்டவர்களின் பெயர் மற்றும் விலாசங்களை சேகரித்து அவர்களை வீட்டில் தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.