ரஜினியை கேலி- ட்விட்டரில் பதிவிட்ட நடிகர்


ரஜினியை கேலி செய்யும் வகையில் ட்விட்டரில் பதிவிட்ட இந்தி நடிகர் ரோகித் ராயை சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.


இந்தியில் காபில், ஏக் கிலாடி ஏக் ஹஸீனா, அபார்ட்மெண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரோகித் ராய்.


இரு தினங்களுக்கு முன்பு ரோகித் ராய் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்து பதிவு செய்தபோது ரஜினிகாந்த் பெயரை இணைத்து கேலி செய்வது போன்று பதிவிட்டிருந்தார்.


மேலும் அந்த படத்துடன், “கொரோனாவை அடக்குவோம், முக கவசம் அணியுங்கள் என்றும் கூறியிருந்தார்.


இந்த பதிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா விழிப்புணர்வுக்கு ரஜினியை கேலி செய்வது ஏற்புடையது அல்ல என ரசிகர்கள் கண்டித்துள்ளனர்.


இதற்கு விளக்கம் அளித்துள்ள ரோகித் ராய்,  நகைச்சுவைக்காக இப்படி பதிவிட்டதாகவும், ரஜினிக்கு இணையாக யாரும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்