இன்றைய ராசிபலன் 29/06/2020


 


மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


ரிஷபம்: தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வீர்கள். பணியாளர்கள் சிரமத்தைப் பார்க்காமல் கடினமாக உழைத்தால் கூடுதல் பலன்களை பெறலாம். நண்பர்களின் உதவி கை கொடுக்கும். பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.


மிதுனம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். புதுவேலை கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர் பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


கடகம்: காதல் வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கும். பணியாளர்கள் தங்கள் முயற்சியால் நன்மை பெறுவார்கள். பெண்கள் குடும்ப நலனில் மிகுந்த அக்கறை கொள்வர். சரியான தருணத்தில் உதவும் நண்பர்களை எண்ணி பெருமிதம் கொள்வீர்கள்.


சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில்  இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.


கன்னி: புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வீர்கள். கலைஞர்கள் தங்கள் துறைகளில் பல சாதனைகளை செய்வர். பெண்கள் தேவையற்ற கற்பனை பயங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். பணியாளர்கள் புத்திசாலித்தனமான செயலால் பாராட்டுப் பெறுவர்


துலாம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கவனம் தேவை. விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.


விருச்சிகம்: யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுக்காதீர்கள். திடீர் அதிர்ஷ்டங்களும், உதவிகளும் தேடி வரும். பெண்கள் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை எட்டுவீர்கள்.


தனுசு: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் சந்திப்பு நிகழும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.


மகரம்: வியாபாரத்தில் சில தடைகள் வரலாம். அலுவலகத்தில் போட்டி பொறாமைகள் ஏற்படும். எதிலும் பொறுமையுடன் செயல்பட்டால் நல்லதே நடக்கும். பெண்கள் புதிய கலைகளைக் கற்றால் நன்மை உண்டு. நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.


கும்பம்:  சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்க பாருங்கள். முன்கோபத்தை குறையுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில்  மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.


மீனம்: சவால்களை எதிர்கொண்டு கடுமையாக உழைத்து வெற்றி காண்பீர்கள். பணம் வருவதில் தடைகள் ஏற்படும். பெண்கள் உடல் நலனில் அக்கறை கொள்ளவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்து சென்றால் கூடுதல் லாபத்தை பெறலாம்.


மோகனா  செல்வராஜ்