இன்றைய ராசிபலன் 28/06/2020


மேஷம்: முன்னேற்றப் பாதையில் அடிஎடுத்து வைப்பீர்கள். பெண்களுக்கு பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சி சிறப்பாகும். வியாபாரத்தில் உள்ள பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரம் காட்டுவீர்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.


ரிஷபம்: மற்றவர்களை நம்பிஎந்த விஷயங்களையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவு எடுப்பீர்கள்.பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள் உத்தியோகத்தில் சில ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.


மிதுனம் : ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பப் பிரச்னைகளை மூன்றாம் நபரிடம் சொல்வதை தவிர்க்கவும். உறவினர் இடையே மனஸ்தாபம் ஏற்படக்கூடும். உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பணியிட மாற்றம் இருக்கலாம். பெண்களுக்கு நல்ல செய்தி வரும்.


கடகம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உறவினர்கள் வீடு தேடிவருவார்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில்  தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.


சிம்மம் : விருப்பமில்லாத இடத்திற்கு உத்தியோக மாற்றங்கள் ஏற்படக்கூடும். வியாபாரிகளின் பணத்தட்டுப்பாடு கட்டுக்குள் வரும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வீண் பழிகளுக்கு ஆளாகியிருந்தவர்கள் அதிலிருந்து விடுபடுவர்.எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். 


கன்னி: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவுலாபம் வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.


துலாம்: கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். அலுவலகத்தில் வேலையைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். சண்டை சச்சரவுகளால் விலகிச் சென்ற சகோதரர்கள் விரும்பி வந்து சொந்தம் கொண்டாடுவார்கள். பிள்ளைகளின் கல்வி பற்றிய முயற்சி கைகூடும்.


விருச்சிகம்: சமயோசிதமாகவும், சாமர்த்தியமாகப் பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தால் புதுதொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சியால் வெற்றியடையும் நாள்.


தனுசு: தொழிலில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். முக்கியச் செலவுக்காக பணம் புரட்ட முடியாமல் தவித்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரிகளுக்கு அரசு வகையில் நன்மை உண்டு. பெண்கள் ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை.முயற்சிகள் பலிதமாகும் நாள்.


மகரம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில்  தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.நெருங்கிய நண்பரிடையே மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


கும்பம்: சந்திராஷ்டமம் இருப்பதால் முன் கோபத்தை குறையுங்கள். எதிலும் தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். மேலதிகாரிகள் முக்கிய விவகாரங்களில் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். தொழிலில் ஆரம்பித்த பணிகள் பாதியிலேயே நிற்கும் சூழல் உருவாகலாம். மகனுக்கு எதிர்பார்த்த வரன் அமையும்.


மீனம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். நல்லது  நடக்கும் நாள்.உறவுகளில் இருந்த மனக்கசப்புகள் மாறும்.


மோகனா  செல்வராஜ்