மேஷம்: இன்று தீவிர முயற்சிகளின் பேரில் சிலருக்கு சுபமான நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.அலுவலகத்திலிருந்து நீண்ட நாளாக எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். கமிஷன் வியாபாரம் நல்ல லாபம் தரும். குடும்பத்தின் வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் கொள்வர்.
ரிஷபம்: இன்று உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். அலைச்சல் இருக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். கூட்டு வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எதிலும் முதலீடு செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொள்ளவும்.
மிதுனம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். அரசால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.
கடகம்: இன்று உங்களின் தரத்தை விட தீயோரோடு சகவாசத்தை குறைக்க வேண்டும். உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு தேடி வரும். பூர்வ சொத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னையை எண்ணி பயம் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வரவு, செலவுகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு தந்தையின் அன்பும், ஆதரவும் உண்டு.
சிம்மம் : இன்று பல்வேறு முன்னேற்றங்களைப் பெறலாம். இருந்து வந்த தடைகள் அகலும். உங்கள் முயற்சிகளில் வெற்றியும், பணமும், வளமும் வந்து சேரும். பொருளாதார உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். அரசாங்க ரீதியிலான காரியங்கள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்
கன்னி: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டு கொடுத்து போவது நல்லது.அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.