இன்றைய ராசிபலன் 24/06/2020


 


மேஷம்: நட்பு வட்டம் விரியும்அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். புதுவேலை கிடைக்கும்.வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். தாயாருக்கு கை கால் வலி வந்து போகும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.


ரிஷபம்: வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். அலுவலகப் பணியாளர்களுக்கு வீண் அலைச்சல்கள் இருக்கும். குடும்பத்தில் நடக்கும் சந்தோஷமான நிகழ்வுகளால் இதமான சூழ்நிலை காணப்படும். நண்பர்களிடம் இடையே இருந்த மனக்கசப்பு மாறும்.


மிதுனம்: இன்று நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பதவிகள் சம்பந்தமான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மன மகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் நிகழும்.  தடைபட்ட காரியங்கள் தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். 


கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும் பத்தாரை குறைகூறி கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் ஒன்று பேசப்போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். உத்தியோகத்தில்உயர் அதி காரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.


சிம்மம் : அலுவலகத்தில் மேலதிகாரியிடம் திடீர் கோபம் ஏற்படலாம். வியாபாரத்தில் காணப்படும் நெருக்கடி நிலையைத் திறம்படச் சமாளிப்பீர்கள். வேலை தேடுபவர்கள் தங்களது முயற்சியை சிறிது காலம் தள்ளிப் போடுவது நல்லது. பண வரவு திருப்திகரமாகும்.


கன்னி: இன்று மற்றவர் பாராட்டு கிடைக்கும். கடன் பிரச்சனை தீரும். பணவரத்து அதிகரிக்கும்.  எதையும்  நிர்ணயிக்கும் திறன் அதிகமாகும். மற்றவர்களுக்காக உதவி செய்யும் போது  வீண்பழி சொல் கேட்க நேரலாம். கவனமாக இருப்பது நல்லது. உடல் சோர்வும் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும்.


துலாம்: உங்களின் அணுகு முறையை மற்றவர் ரசனைக்கு ஏற்பமாற்றி கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். நன்மை நடக்கும் நாள்.


விருச்சிகம் : அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் எதிர்கால நலன் பற்றிய உங்கள் திட்டம் பலன் தரும். பணப்புழக்கம் அதிகரிப்பதால் பழைய கடன்களை அடைப்பீர்கள். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.


தனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் வேண்டா வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. உங்களை யாரும் கண்டு கொள்வதில்லை என்று ஆதங்கப்படுவீர்கள். உற்றார் உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி செய்திகளை பெறுவீர்கள்.நாவடக்கம் தேவைப்படும் நாள்.


மகரம் : அலுவலக விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. பெண்கள் குடும்ப விஷயங்களைப் பற்றி அக்கம் பக்கத்தினருடன் அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு. புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.


கும்பம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லி தருவார். தொட்டது துலங்கும் நாள்.


மீனம்:  இன்று குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் உங்களது சொல்படி நடப்பது மனதுக்கு இதம் அளிக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். பயணங்கள் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும்


மோகனா  செல்வராஜ்