இன்றைய ராசிபலன் 23/06/2020


 


மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். ஒரு சிலர் உங்கள் உதவியைநாடுவார்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த கடனுதவி தாமதமின்றி கிடைக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.


மிதுனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். பெண்களுக்குத் தொட்டது அனைத்தும் துலங்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.


கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமைஎடுத்துக் கொள்ளாதீர்கள். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள் .


சிம்மம் : அலுவலகத்தில் சிக்கலான பிரச்னைகளுக்கு சுமூகமான முடிவை காண முற்படுவீர்கள். தொழில், வியாபாரம் நிதானமாக நடந்தாலும் லாபம் இருக்கும். பெண்களுக்கு எதிர்பாலினத்தவரால் நன்மை உண்டு. நீண்ட நாள் கனவு நிறைவேறும். பழைய பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது.


கன்னி : பெண்கள் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வியாபாரிகள் புதிய ஆர்டர்கள் பற்றி உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றமான நிலை உண்டாகலாம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் முழுக் கவனம் செலுத்துவது நல்லது.புகழ் கௌரவம்கூடும் நாள்.


துலாம் : வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் பொறுமையாக இருப்பது நல்லது. பெண்களின் பேச்சினால் குடும்பத்தில் ஏதாவது பிரச்னை ஏற்படலாம். அந்தஸ்து உயரும் நாள். அலுவலகத்தில் எல்லோரையும் அனுசரித்து செல்வது பலவகைகளில் நன்மை தரும்.


விருச்சிகம்: சுபநிகழ்ச்சிகள் பற்றிய ஏற்பாடுகள் நிம்மதியை தரும். குடும்பத்தில் கடந்த நாட்களில் இருந்த பதற்ற நிலை மறையும். அலுவலகத்தில் தள்ளிப்போன வேலைகள் நல்லபடியாக முடியும். கலைத்துறையினர் தங்களின் முயற்சிகளில் வெற்றி பெறுவர்


தனுசு: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான் கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


மகரம் : அலுவலகத்தில் கவனம் சிதறாமல் பணிபுரிவது நல்லது. கலைத் துறையினருக்கு நன்மை உண்டு. கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும்.பெண்கள் எந்த செயலிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.


கும்பம்: உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகார பதவியில் நட்பு கிடைக்கும் வழக்கில்  நல்ல தீர்ப்புகள் வரும். பழைய சொந்த பந்தம் தேடி வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.கடந்த காலத்தில் உங்களைத் தூற்றியவர்கள் போற்றுவார்கள்.


மீனம்: பெண்கள் கடந்த கால தவறுகளை எண்ணி வருந்த வேண்டாம். வியாபாரிகள் பெரிய தொகை பற்றி வாக்குறுதிகள் கொடுக்கும் போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சில புதிய மாற்றங்களை சந்திப்பீர்கள்.நட்பு வழியில் நல்ல செய்திகேட்பீர்கள்.


மோகனா செல்வராஜ்