13/06/2020 இன்றைய ராசிபலன்


மேஷம்


குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பழைய கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நம்பிக்கைக்கு உரியவரை கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் ஏற்படும்  வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.


ரிஷபம்


கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் ஏற்படும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.


மிதுனம்


கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். கேட்டஇடத்தில் பணம் கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளியூர் பணிகளால் பொருள் வரவு அதிகரிக்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள்.


கடகம்


சந்திராஷ்டமம் தொடர்வதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்கவேண்டி வரும்.நேர்மைக்கான அங்கீகாரம் கிடைக்கும்.  மற்றவர்களுக்குஉதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கி கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். போராடி வெல்லும் நாள்.


சிம்மம்


கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். கடனால் மனவருத்தங்கள் உண்டாகும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள் .


கன்னி


குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும்.அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.  பொதுக்கூட்டப் பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.


துலாம்


புதிய திட்டங்கள் நிறைவேறும். துணிவுமிக்க தீரச் செயல்களால் மேன்மை உண்டாகும்.பிள்ளைகளின் உயர் கல்வி,உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.


விருச்சிகம்


முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.


தனுசு


திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள்.  பேச்சுக்களால் தனலாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.


மகரம்


குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நவீன சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய மனை வாங்குவதற்கான சாதகமான வாய்ப்புகள் அமையும். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பாதியில் நின்ற வேலைகள் விரைந்துமுடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


கும்பம்


ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் அகன்று தெளிவு பிறக்கும்.சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும். வளைந்து கொடுத்து செல்லவேண்டிய நாள்.


மீனம்


குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். மூத்த சகோதரர்களால் சாதகமான சூழல்  ஏற்படும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். யாருக்கும் சாட்சிகையெழுத்திட வேண் டாம்.வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் ஊழியர்களால் பிரச்சினைகள் வந்து நிற்கும். கவனம் தேவைப்படும் நாள்.


மோகனா செல்வராஜ்