பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு-எப்படி ரிஸ்க்


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன்?. தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு யார் பாதுகாப்பு அளிப்பது.


ஜூன் 15ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது


லட்சக்கணக்கான மாணவ, மாணவியரின் நலனில் எப்படி ரிஸ்க் எடுக்க முடியும்?


மாணவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.


கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கவனிக்கவில்லையா? 9 லட்சம் மாணவர்கள், 3 லட்சம் ஆசிரியர்கள், காவல்துறை, வருவாய் துறையினரை இக்கட்டான நிலைக்கு உள்ளாக்க வேண்டுமா? பொதுமுடக்க காலத்திலேயே பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த என்ன அவசியம்?


10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வழக்கு 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு- தமிழக அரசு கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு.


பொதுத்தேர்வை தமிழக அரசு தள்ளிவைக்க வேண்டும்: மனுதாரர் மாயவன் பேட்டி


எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம் என்று அரசு தரப்பில் வாதிட்டது என மனுதாரர் மாயவன் தெரிவித்துள்ளார். 

 

அரசு தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என்று ஐகோர்ட் கூறியது. 10 லட்சம் மாணவர்களின் உயிர் சம்மந்தப்பட்டது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

 

 எனவே பொதுத்தேர்வை தமிழக அரசு தள்ளிவைக்க வேண்டும் என மாயவன் வலியுறுத்தியுள்ளார்.

 



  •  

  •