செய்யக் கூடாதவை...
* தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் உடற்பயிற்சி செய்யக் கூடாது.
* தூங்கச் செல்வதற்கு குறைந்தபட்சம் 1 மணி நேரத்துக்கு முன் டீ, காபி, மது என எதையும் குடிக்கக் கூடாது.
* படுக்கையறையில் தொலைக்காட்சி பெட்டியைப் பொருத்துவதை முற்றிலும் தவிர்த்துவிடுவது நல்லது. தூங்குவதற்குமுன், தொலைக்காட்சியைப் பார்ப்பதால், தூக்கத்துக்குத் தேவைப்படும் மெலடோனின் ஹார்மோன் சுரப்பது குறையும். ஒருவேளை, படுக்கையறையில் தொலைக்காட்சி பொருத்தவேண்டிய தேவையிருந்தால், தூங்குவதற்கு அரைமணி நேரத்துக்குமுன் தொலைக்காட்சிப் பார்ப்பதை நிறுத்திவிடுங்கள்.
* நனைந்த மற்றும் இறுக்கமான உள்ளாடைகளுடன் தூங்கச் செல்லக்க கூடாது.
* நள்ளிரவில் விழிப்பு ஏற்பட்டால், இயல்பாக இருங்கள். அடுத்த நாள் பார்க்கவேண்டிய வேலைகளைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிடாதீர்கள்.
* மதியம் மற்றும் மாலை நேரத் தூக்கத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். இது இரவு தூக்கத்தை பாதிக்கும்.
* படுக்கையறையைத் தூங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். படுக்கையில் உட்கார்ந்து அலுவலக வேலைகளைச் செய்வதோ, டி.வி., கம்ப்யூட்டர், லேப்டாப் பார்ப்பதோ கூடவே கூடாது.
* இரவில், படுத்தவாறே குறைந்த வெளிச்சத்தில் மொபைல், ஐபேட் போன்றவற்றில் மின்னணுப் புத்தகத்தை ( e book) படிப்பதைத் தவிர்க்கலாம்.
* இரவுகளில் எளிதில் செரிக்காத தயிர், முட்டை, மாமிசம், எண்ணெயில் பொரித்த சிப்ஸ், மஞ்சூரியன் போன்ற உணவுகள் மற்றும் காரமான உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
மோகனா செல்வராஜ்