பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் (67) காலமானார்

 




மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் உடலநலக்குறைவால் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர்,67 ,70-களில் 'மேரா நாம் ஜோக்கர், படத்தில் அறிமுகமானார், 1973-ல் வெளியான ' பாபி' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர்; நேற்று இரவு இவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து உடல் சோர்வடைந்தார். உடனடியாக அவரது குடும்பத்தினர் மும்பை எச்.என்.ரிலையன்ஸ் பவுண்டேசன் மருத்துவமனையில் அனுமதித்தனர்.








பிரபல நடிகர் ரிஷி கபூர்: சிகிச்சை பலனின்றி உயிர்பிரிந்தது.. ரசிகர்கள் அதிர்ச்சி
ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு புற்றுநோய் சம்பந்தமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் சிகிச்சை பெற்று 2019-ம் ஆண்டு நாடு திரும்பினார்.இந்நிலையில் அவருக்கு புற்றுநோய் சம்பந்தமான நோய் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. டாக்டர்கள் ரிஷி கபூருக்கு சிகிச்சைஅளித்து வருவதாக அவரது மனைவி நீத்து கபூர் தெரிவித்தார்.