காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மனித உரிமை பிரிவு வடசென்னை கிழக்கு, தலைவர் அப்துல் சமது பிறந்த நாள் விழா

 


    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மனித உரிமை பிரிவு வடசென்னை கிழக்கு, தலைவர் அப்துல் சமது பிறந்த நாள் விழா


திருவாளர் எஸ்.பிரேம்பால் தலைமை தாங்கினார்.

திருவாளர் ஆர்.கே.நகர்.எம். லத்தீப் அவர்கள் முன்னிலை வகித்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளர் மௌனப் புயல் சி.டி.மெய்யப்பன் அவர்கள்; சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.


முன்னதாக தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் வெற்றியை கொண்டாடும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளரும் சட்டமன்ற மேனாள் உறுப்பினருமான அருள் அன்பரசு அவர்களும் மாநில செயலாளர் திருமதி அனுசுயா எர்னஸ்ட் அவர்களும் கொடியசைத்து, அனைவரையும் வழிநடத்தி டி.எச். ரோட்டில் உள்ள சர் தியாகராய கல்லூரி முதல் தண்டையார்பேட்டை அகஸ்தியா அப்பார்ட்மெண்ட் வரை ஊர்வலமாக, தலைவர் ராகுல் காந்தியின் பாதயாத்திரை விளக்கத்தை கோஷமிட்டு, அழைத்துச் சென்றார்.    அதனை அடுத்து, "ராஜீவ் நட்பகம்" அன்பர்கள் ஒன்றுகூடி வடசென்னை மாவட்ட மனிதஉரிமை துறை மேனாள் தலைவரும், கொரானா காலத்தில் மக்கள் சேவையில் மகத்தான பங்களித்தவருமான திருவாளர் முனைவர் அப்துல் சமது அவர்களின் பிறந்த நாள் விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.

இந்நிகழ்வில்

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயலாளர் திரு.ஐஸ் ஹவுஸ் தியாகு, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜி. பொன்னுரங்கம், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பர்சித், மாமன்ற உறுப்பினர் ரமேஷ் கண்ணன், மேனாள் மாமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணி, எம்.கே.பாபு சுந்தரம்,  முக்கிய நிர்வாகிகள் திருவாளர்கள் புழல் குபேந்திரன்,நரசிம்மன்,குபேந்திரன், தண்டபாணி, அலெக்ஸ், வடசென்னை மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் ஏ.எஸ்.ஷாஜகான், மாவட்ட துணைத் தலைவர்கள் முனைவர் I.முகமது பாரூக், கே.வி.எஸ்.தயாளன், மாவட்ட வர்த்தகப் பிரிவு தலைவர் வே.உமாபதி, எஸ்.சி.துறை மாவட்ட மேனாள் தலைவர் கே.கே.வி.குமரன், மனித உரிமைத் துறை மாநில செயலாளர் பி.வேலா, வட்டத் தலைவர் வி.கே.செல்வராஜ், வழக்கறிஞர்கள் சயது அகமது சரீப், எஸ்.ராகுல்,  மாவட்ட பொது செயலாளர் ஆர்.கே.சிவராஜ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஈ.எஸ்.பார்த்தசாரதி, இளைஞர் காங்கிரசை சேர்ந்த சபீர்,என்.பரத், மகளிர் அணியை சேர்ந்த திருமதிகள் மாத்தூர் ரங்கநாயகி, ராஜ காந்தி, யசோதா, நிர்வாகிகள் ஜெ.ஜெயபிரகாஷ், எஸ்.அன்பழகன், என்.பி.சுந்தரம், ஏ.துறாபுதீன், ஆர்.சுரேஷ் குமார், பி.முனியன், ஜீவானந்தம், ஏ.கலீமுள்ளா, கே.காளிதாஸ், எம்.ஏழுமலை, ஏ. காஜா மொகிதீன், எம்.ஜெகதீசன், எச்.பெரோஸ்கான், சையத் ஜாபர், திலிப், சரவணன், எம்.லியாகத், அப்ரோஸ், ஏ.காதர், ஜி.சண்முகம், சுப்பம்மா மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் அனைவருக்கும் கறி விருந்து பரிமாறப்பட்டது. நிகச்சியினை ராஜீவ் நட்பகம் நிறுவனரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளருமான க இராமலிங்க ஜோதி ஒருங்கிணைத்தார்.

மு இராமச்சந்திரன்