காதல் திருமணம் பெற்றோர் கைது

 


    காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர் உள்பட 3 பேர் கைது


நெல்லை: காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர் உள்பட 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கூடங்குளம் அருகே ஸ்ரீரகுநாதபுரத்தில் ஒரு மாதம் முன்பு முருகன் (24) என்பவரை காதலித்து சுமிகா (19) திருமணம் செய்தார். காதல் திருமணம் செய்து கொண்ட சுமிகாவை அவரது பெற்றோர் உள்ளிட்டோர் கடத்தியதாக புகார் எழுந்த நிலையில், கேரள மாநிலம் பாலராமபுரத்தில் பதுங்கி இருந்த சுமிகா தாய் பத்மா, தந்தை முருகேசன், சித்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

  செய்தியாளர் கார்த்திக்

🌏-----உண்மை செய்திகள்------🌏