குறளோடு உறவாடு (21/22/23)

 


        குறளோடு உறவாடு (21)

******************************

          🍁 நீத்தார் பெருமை

         *********************

                        🙏குறள்

"ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிபு..."

                         💐உரை

ஒழுக்கத்திலே நிலைத்து, துறந்தவர்களின் பெருமையை, உயர்வான பொருள்கள் எல்லாவற்றையும் விட உயர்வாக நூல்கள் துணிந்து போற்றுகின்றன.


குறளோடு உறவாடு (22)

******************************

                          🙏குறள்

"துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக் கொண் டற்று...."

                        💐உரை

ஆசைகளையெல்லாம் விட்டவரின் பெருமையினை எண்ணி கணக்கிட்டு சொல்வதானால், இந்த உலகில் இதுவரை இறந்தவர்களை கணக்கிட்டு பார்ப்பதற்கு சமமாகும்.


குறளோடு உறவாடு (23)

******************************

                           🙏குறள்    

"இருமை வகைதெரிந்து

 ஈண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு...."

                          💐உரை

பிறப்பு, வீடு ஆகிய இரண்டின் தன்மையை அறிந்து, துறவறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் சிறந்ததாகும்.


                        🙏 திருவள்ளுவர்

-

 க.இராமலிங்க ஜோதி.



குறிப்பு; லிங்க் ஒரு முறை உங்கள் மொபைலுக்கு வந்தால் போதும் நமது லிங்கில் வரும் செய்திகளை எப்போது வேண்டுமானாலும் ALL கிளிக் செய்து அனைத்து செய்திகளையும் படிக்கலாம்🙏🙏