ஓபிஎஸ் தலைமையில் ஆட்சி அமைப்போம் புதிய மாவட்ட செயலாளர்கள் சபதம்

 


        அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வம்  தலைமையில் அம்மா  ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் தென்சென்னை மாவட்ட அதிமுகவின் புதிய நிர்வாகிகள் உறுதியேற்றனர்


தென்சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுகவின் புதிய நிர்வாகிகள் சமீபத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வம்  அண்மையில் அறிவித்தார், புதிதாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் தென்சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் டாக்டர் எம்.வி.சதீஷ் தலைமையில் சென்னை கடற்கரையில் உள்ள புரட்சித்தலைவி ஜெயலலிதா நினைவிடத்தில் உறுதிமொழியேற்று பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ராஜலட்சுமி, இளைஞர் அணி மாநில இணைச்செயலாளர் அமலன் சாம்ராஜ் பிரபாகரன்  ஆகியோர் பங்கேற்றனர்


புதிய நிர்வாகிகள் தாங்கள் மேற்கொண்ட உறுதிமொழியில் எம்ஜிஆர் மறைவிற்கு பின்னர் தனக்கு பின்னாலும் அதிமுக நூறாண்டு காலம் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கையோடு சட்டமன்றத்தில் தீர்க்கத்தரிசனத்துடன் தெரிவித்தார் என்றும் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னால் பதவி வெறி பிடித்த சுயநல சக்திகளால் பொன்விழா கண்ட அதிமுக பிளவுப்பட்டு கிடக்கிறது, லட்சோப லட்சம் தொண்டர்களின் நலன் காக்க அதிமுகவின் ஒரே நம்பிக்கையாக விளங்கும் மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் மீண்டும் தமிழகத்தில் அம்மாவின் நல்லாட்சியை அமைப்போம் என்றும் அதற்காக கழகத்தின் புதிய நிர்வாகிகள் அனைவரும் இரவு பகல் பாராது பாகுபாடின்றி உழைப்போம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது


இந்த உறுதியேற்பு நிகழ்ச்சியில்  பகுதி செயலாளர்கள் குங்குமம் பிரபாகரன் ( சேப்பாக்கம் தெற்கு ) கேசவன் ( ஆயிரம் விளக்கு தெற்கு ) அஜித் ( திருவல்லிக்கேணி கிழக்கு) கார்த்தி ( திருவல்லிக்கேணி ஆகியோரும் பிற அணி மாவட்ட செயலாளர்கள் சதீஷ்குமார்( இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை) ராஜேஷ்( இளைஞரணி) கணேஷ்பிரபு ( வழக்கறிஞர் அணி) மொய்தீன் ( சிறுபான்மைப்பிரிவு) வேல்முருகன் (கலைக்குழு) முனிவேல்( எம்ஜிஆர் மன்றம்) பாலாஜி( தகவல் தொழில்நுட்ப அணி) ஸ்ரீவித்யா( மகளிர்அணி)  அங்குட்( தொழிற்துறை) மகளிர் அணி இணை செயலாளர்கள் ராஜேஸ்வரி, துணை செயலாளர் லாவண்யா, இளைஞர் அணி இணை செயலாளர் கணேஷ்குமார், மாவட்ட அவைத்தலைவர் பொன்.ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் நித்யானந்தம்  ஆகியோர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கலந்துகொண்டனர்,


செய்தியாளர் தங்கதுரை