மது விற்பனையில் சாதனை படைத்த மதுரை

 


        தீபாவளி  பண்டிகையையொட்டி, ,இனிப்பு மற்றும்  துணிக்கடைகளில் தான் அதிக அளவில் மக்கள் கூட்டம் திரளும்  ஆனால், இந்த கடைகளை விட மதுபான கடைகளில் தான் மக்கள் குவிந்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.   

தீபாவளி பண்டிகையையொட்டி இரண்டு நாட்களில் ரூபாய் 464.21 கோடிக்கு  மதுபானங்கள் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது தமிழகம் 

தலைநகரம் சென்னையில் மிகக்குறைவாக ரூபாய் 51.52கோடிக்குதான் விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றன.ஆனால் சங்கம் வளர்த்த   மதுரை மாநகரம் மது விற்பனையில் முதலிடம் பெற்றது.   இரண்டே நாளில் அங்கு மது விற்பனை ரூபாய் 55.78 கோடியை எட்டியது.  தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும்  கோவையில்   ரூபாய் 48.47 கோடியை தொட்டிருக்கிறது திருச்சி-50.66 கோடி சேலம் 52.36 கோடி. சென்னை திருச்சி கோவை மதுரை  சேலம் ஆகிய மாவட்டங்களில்மட்டும் மது விற்பனை ரூபாய் 258.79 கோடியை தாண்டியது.

தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக ரூ.464.21 கோடி மதிப்பில் மது விற்பனை:


செய்தியாளர் பாஸ்கர்