மின் கட்டணம் உயர்கிறது அமைச்சர் செந்தில்பாலாஜி
200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றிற்கு ரூ.1 உயர்த்த பரிசீலனை. வணிக மின் நுகர்வோருக்கு ரூ.50 உயர்த்த பரிசீலனை
மாதம் 301 - 400 வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.147.50 உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதல் மின் கட்டணம். கேஸ் இணைப்பை போல, 100 யூனிட் இலவச மின்சாரத்தை நுகர்வோர் வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் புதிய திட்டம் அறிமுகம்.
விசைத்தறி நுகர்வோர்களுக்கு 750 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தினால் யூனிட் ஒன்றுக்கு 70 பைசா உயர்த்த பரிசீலனை
மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என மத்திய அரசு எச்சரிக்கை - அமைச்சர் செந்தில் பாலாஜி
செய்தியாளர் பாலாஜி