இருவரி செய்தித்துளிகள்

 


    💢நடிகர் வில் ஸ்மித்* *"கோடா"* திரைப்படத்துக்கு *ஆஸ்கர்* விருது வழங்கப்பட்டது


விருது வழங்கும் விழாவில் நடிகர் தன் மனைவியின் தலைமுடியை விமர்சனம் செய்தவரை கன்னத்தில் அறைந்தார். இந்த நிகழ்வுக்கு அனைவரிடமும் மன்னிப்பு கோரினார்.


    💥நான் துபாய்க்கு பணத்தை எடுத்து வந்ததாக தவறாக பரப்புரை செய்யப்படுகிறது; நான் பணத்தை எடுத்து வரவில்லை, தமிழர்களின் மனங்களைத்தான் எடுத்து வந்தேன்.



- அபுதாபி தமிழர்களிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை. துபாய்க்கு பணத்தை எடுத்து வந்ததாக தவறாக பரப்புரை செய்யப்படுகிறது; நான் பணத்தை எடுத்து வரவில்லை, தமிழர்களின் மனங்களைத்தான் எடுத்து வந்தேன்.

துபாய், அபுதாபியில் இருப்பது தமிழ்நாட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது;

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைவருக்குமான வளர்ச்சி என்பதே திராவிட மாடல்.

- அபுதாபி தமிழர்களிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.


    💥தமிழக முதல்வர் துபாய் பயணம் - 6 MoU மதிப்பு 6500 கோடி...

 நோபல் ஸ்டீல்ஸ் - 1100 கோடி 

ஜவுளிதுறை -  500கோடி 

மருத்துவத்துறை -  500கோடி

Sheraf - 500கோடி 

உணவு பதப்படுத்தக்கூடிய தொழில் மற்றும் கட்டுமான துறையை சார்ந்த LULU நிறுவனத்தோடு- 3500கோடி ரூபாய் மதிப்பில் MoU தமிழக அரசு


    💥சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கிங்ஷுக் தேவ் சர்மா ஏற்கனவே முன் ஜாமின் பெற்றிருந்ததால் அவரை அங்குள்ள நீதிமன்றம் விடுவித்தது


    💥கடலூரில் காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை - கிஷோர் (19), சதிஷ் (19), ஆரிப் (18) ஆகிய 3 இளைஞர்கள் கைது


போலீசார் தொடர்ந்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்


    💥நாடு முழுவதும் 2வது நாளாக இன்று பொது வேலைநிறுத்தம் - மாணவர்கள் நலன் கருதி 60% பேருந்துகள் இயக்கப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவிப்பு


    💥கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் மற்றும் அவர்களின் விசைப்படகை இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது


    💥முன்னால் சென்ற லாரி மீது பின்னால் வந்த லாரி மோதியதில் ஒருவர் பலி 4 பேர் காயம்;

கோவில்பட்டி போலீசார் விசாரணை


    💥கேரளாவில் அனைத்து அரசு ஊழியர்களும் கண்டிப்பாக இன்று பணிக்கு வர வேண்டும் - கேரள உயர்நீதிமன்றம்;


பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் பிடிக்கப்படும் - கேரள அரசு"


    💥ஆப்கானிஸ்தானில் பொழுதுபோக்கு பூங்காவிற்கு ஆண்- பெண் சேர்ந்து வர தடை

பள்ளிகளில் பெண்கள் வர கூடாது என்று ஆப்கானிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது


    💥இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச உடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் சந்திப்பு


    💥நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும்


நீலகிரியில் உள்ள படுகர் சமூகத்தையும், மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்

மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா பேச்சு


    💥பழம்பெரும் நடிகை செளகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தார் குடியரசுதலைவர்.



    💥தமிழ்நாட்டில் படிக்கும் இளைஞர்கள், வேலை தேடுபவர்களுக்கு முதலமைச்சரின் சுற்றுப் பயணம் சிறப்பானதாக அமையும்;


முதலமைச்சரின் சுற்றுப் பயணத்தை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்கட்சியினர் தங்கள் விருப்பம் போல கூறுகின்றனர். - அமைச்சர் பொன்முடி


    💥இந்தியாவிடம் மேலும் 1 பில்லியன் டாலர் கடனுதவி கோரும் இலங்கை


பொருளாதார நெருக்கடிக்குள்ளான இலங்கைக்கு ஏற்கனவே ஒரு பில்லியன் டாலர் இந்தியா கடனுதவி


அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்காக கடனுதவி கோரிக்கை


    💙💥ரிலையன்ஸின் Viacom 18 நிறுவனம் முழு நேர விளையாட்டு தொலைக்காட்சியை ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்குகிறது.


    💥💦உக்ரைனில் முடிவுக்கு வராத போர்.. இந்தியா வரும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்


    💦💥பிரேசிலில் நடக்கும் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு நிதியுதவி

விமான கட்டணமாக தலா ₹30,000 வழங்கப்படும் என அறிவிப்பு


    💦💥புதுச்சேரியில், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம்.


தனியார் பேருந்துகள் முற்றிலும் இயக்கப்படவில்லை, அரசு பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கம்


    💙*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்*

*திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்*


சென்னை, பெருங்குடி, உலக வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அமேசான் நிறுவனத்தின் சேவை மையத்தை இன்று (29.03.2022) செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் திறந்து வைக்கிறார்கள்.


    💦💥கோவை பீளமேடு பகுதியில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவன் மகேஷ்வரன் கைது - 1.25 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்


புளியகுளம் பகுதியிலும் கஞ்சா விற்ற மணிகண்டன் என்பவர் கைது; கோவையில் போலீசாரின் தொடர் நடவடிக்கையால் கஞ்சா வியாபாரிகள் அடுத்தடுத்து கைதாகி வருகின்றனர்


    💦💥கடலூரில் காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை - கிஷோர் (19), சதிஷ் (19), ஆரிப் (18) ஆகிய 3 இளைஞர்கள் கைது


போலீசார் தொடர்ந்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்


    💦💥தமிழகத்தில் டாஸ்மாக் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி


    💦💥சென்னை, வளசரவாக்கத்தில் வேன் மோதி பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரம்


வேன் ஓட்டுநர் பூங்காவனம், பணிப்பெண் ஞான சக்தி ஆகியோருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் - பூந்தமல்லி நீதிமன்றம்


    💥💦சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கிங்ஷுக் தேவ் சர்மா ஏற்கனவே முன் ஜாமின் பெற்றிருந்ததால் அவரை அங்குள்ள நீதிமன்றம் விடுவித்தது


நிருபர் பாஸ்கர்