இன்றைய ராசிபலன்

 


        இன்றைய (19-01-2022) ராசி பலன்கள்


மேஷம்

ஜனவரி 19, 2022


பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். ஆதரவு மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சைஅஸ்வினி : நெருக்கடிகள் குறையும். 


பரணி : ஒற்றுமை அதிகரிக்கும். 


கிருத்திகை : தன்னம்பிக்கை மேம்படும்.

            --------------------------------------


ரிஷபம்

ஜனவரி 19, 2022


செய்கின்ற முயற்சியில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்காலம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அனுபவம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்கிருத்திகை : மாற்றமான நாள். 


ரோகிணி : அனுபவம் மேம்படும். 


மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.

            --------------------------------------


மிதுனம்

ஜனவரி 19, 2022


மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும்.  உத்தியோகத்தில் தவறிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.


திருவாதிரை : வாய்ப்புகள் ஏற்படும். 


புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

            --------------------------------------


கடகம்

ஜனவரி 19, 2022


உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். புதிய முயற்சிகளுக்கு மாறுபட்ட முறையில் வியூகங்களை அமைப்பீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்புபுனர்பூசம் : புதுமையான நாள். 


பூசம் : புரிதல் உண்டாகும். 


ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

            ---------------------------------------


சிம்மம்

ஜனவரி 19, 2022


குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். பேச்சுவன்மையின் மூலம் லாபம் அடைவீர்கள். நுணுக்கமான சில விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்மகம் : மகிழ்ச்சியான நாள். 


பூரம் : பொறுப்புகள் குறையும். 


உத்திரம் : அலைச்சல்கள் மேம்படும்.

            ---------------------------------------


கன்னி

ஜனவரி 19, 2022


வியாபார பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு ஏற்படும். வாகன பயணங்களின் மூலம் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். அன்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்உத்திரம் : இழுபறிகள் குறையும். 


அஸ்தம் : ஆதரவு கிடைக்கும். 


சித்திரை : லாபகரமான நாள்.

            --------------------------------------


துலாம்

ஜனவரி 19, 2022


மனதளவில் புதுவிதமான உத்வேகத்துடன் காணப்படுவீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த சில பணிகளை செய்து முடிப்பீர்கள். தடைகள் குறையும் நாள்.அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்சித்திரை : உத்வேகம் பிறக்கும்.


சுவாதி : ஒத்துழைப்பு கிடைக்கும். 


விசாகம் : முடிவுகள் சாதகமாகும்.

            --------------------------------------


விருச்சிகம்

ஜனவரி 19, 2022


எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். உயர் கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்விசாகம் : வரவுகள் மேம்படும். 


அனுஷம் : விருப்பங்கள் நிறைவேறும். 


கேட்டை : தாமதங்கள் குறையும்.

            --------------------------------------


தனுசு

ஜனவரி 19, 2022


கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் தோன்றும் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் சற்று பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் காலதாமதமாக கிடைக்கும். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்மூலம் : அனுசரித்து செல்லவும். 


பூராடம் : குழப்பமான நாள்.


உத்திராடம் : பொறுமை வேண்டும். 

            --------------------------------------


மகரம்

ஜனவரி 19, 2022


புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் சோர்வின்றி செயல்படவும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். தாமதங்கள் குறையும் நாள்.அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்


 

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள். 


திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும். 


அவிட்டம் : வாய்ப்புகள் சாதகமாகும்.

            --------------------------------------


கும்பம்

ஜனவரி 19, 2022


குழந்தைகளின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். இன்பம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும். 


சதயம் : வெற்றி கிடைக்கும். 


பூரட்டாதி : விருப்பங்கள் நிறைவேறும். 

            --------------------------------------


மீனம்

ஜனவரி 19, 2022


உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனை சார்ந்த செயல்பாடுகளின் மூலம் ஆதாயமடைவீர்கள். ஆன்மிக செயல்பாடுகளில் ஈர்ப்பு உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் ஏற்படும். பயணம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். வரவு மேம்படும் நாள்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும். 


உத்திரட்டாதி : எண்ணங்கள் கைகூடும். 


ரேவதி : நெருக்கம் அதிகரிக்கும்.

            -----------------------------------


                          *சுபம்*


 திருமதி மோகனா செல்வராஜ்


🙏 உயிர் காக்கும் கவசம் தடுப்பூசி🙏