இரு வரி செய்திகள்

 


        👉சென்னை, சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் கிறிஸ்துமஸ் பெருவிழாவில்  முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு, விழாப் பேருரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

                        💗💗💗💗💗💗

     💢💥பிரதமர் படத்தை நீக்க கோரிய நபருக்கு அபராதம்


கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படத்தை நீக்க கோரிய நபருக்கு ₨1 லட்சம் அபராதம் விதிப்பு - கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு


இந்த வழக்கு பொதுநலன் கருதி அல்ல, புகழ் நலன் கருதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது

                    💗💗💗💗💗💗

     👨விழுப்புரத்தில் சேதமடைந்த பள்ளி கட்டடங்கள் இடிப்பு - மாவட்ட ஆட்சியர் 


விழுப்புரம் மாவட்டத்தில் சேதமடைந்த நிலையில் 601 பள்ளி கட்டடங்கள்


முதற்கட்டமாக 57 பள்ளி கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன


தண்டலம் பகுதியில் நடைபெறும் பணியை பார்வையிட்ட ஆட்சியர் மோகன்

                    💗💗💗💗💗💗
     🙏கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பளாராக செல்வகுமார் இன்று பொறுப்பேற்றார்.

                    💗💗💗💗💗💗

     ✌👉முதல்முறையாக இன்டர்நெட் வசதி பெறும் மலைக்கிராமம்


காரையாறு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் இன்டர்நெட் வசதி


*இன்டர்நெட் இல்லாததால் 6 கி.மீ. சென்று ஆன்லைன் வகுப்பில் பங்கேற்ற மாணவர்கள்

                    💗💗💗💗💗💗

     💢💥மதுரை: தென் தமிழகத்தில் முதன் முறையாக அரசு மருத்துவமனையில் எலும்பு வங்கி


எலும்பு வங்கியை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் 


முதுகுதண்டுவட சிகிச்சை மையத்தையும் திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

                    💗💗💗💗💗💗

👉மதுரை மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டுவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது; வீரம் நிறைந்த விவேகம் கொண்ட மதுரை மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

                    💗💗💗💗💗💗

 ✌புனையப்பட்ட வழக்குகளின் மூலம் அதிமுக முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய துடிப்பதா?


தமிழ்நாடு அரசுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கண்டனம்

                    💗💗💗💗💗💗

     👆தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி கோரிக்கை


*தமிழ்நாடு அரசின் பாடநூல்களை தமிழகத்தில் மட்டுமே அச்சிடும் வகையில் முதலமைச்சர் விரைவில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்


*தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்


                    💗💗💗💗💗💗


நிருபர் கார்த்திக்