பெண் காவலர் உயிரிழப்பு தலைமைச் செயலகத்தில் பெரிய மரம் விழுந்து

 


        தலைமைச் செயலகத்தில் இன்று பெரிய மரம் கீழே விழுந்து பெண் காவலர் ஒருவர் உயிரிழப்பு


சென்னை தலைமைச் செயலகத்தில் பலத்த மழை காரணமாக பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் கவிதா என்ற பெண் காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு  போக்குவரத்து காவலர் படுகாயம் அடைந்துள்ளார். 2 கார்கள் சேதம் அடைந்துள்ளன. இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. தீயணைப்புத்துறை அதிகாரிகள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். 


காயமடைந்த ராயபுரம் போக்குவரத்து தலைமை காவலர் முருகன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.   உயிரிழந்த கவிதாவின் உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்


உயிரிழந்த காவலர் கவிதா அரக்கோணத்தை சேர்ந்தவர் அவருக்கு (41) வயதாகிறது. 2005ஆம் ஆண்டு பேட்ச் காவலரான இவர் தற்போது முத்தியால்பேட்டை போக்குவரத்து பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். 


தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த கவிதாவுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். முதல் மகன் அருண்குமார் சேலத்தில்  கல்லூரியில் படித்து வருகிறார். மகள் சினேக பிரியா பிஎஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மூன்றாவதாக மகன் விஷால் மண்ணடியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்


பாதுகாப்பு பணிக்காக இன்று தலைமைச் செயலகம் வந்த தலைமை காவலர் கவிதா, முதல்வர் தனிப்பிரிவு அலுவலகம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பெரிய மரம் மேலே விழுந்து காவலர் கவிதா உயிரிழந்தார். விபத்து நிகழ்ந்த இடத்திற்கு தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் பார்வையிட்டார். மேலும் அவர் ஆபத்தான நிலையில் உள்ள பல மரங்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டுள்ளார். 



விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வந்து டிஜிபி சைலேந்திர பாபு விபத்து குறித்து விசாரணை  மேற்கொண்டார். தீபாவளி கொண்டாடப்பட உள்ள நேரத்தில் மரம் விழுந்து காவலர் உயிரிழந்தது காவல் துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சில நிமிடம் முன் வரை தங்களுடன் பேசிக்கொண்டிருந்த பெண் காலவர் திடீரென மரம் விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கிருந்த காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தலைமைச் செயலகத்தில் இதுவரை இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்ததில்லை என்பதால் பணிக்கு வந்தவர்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளனர் 



 ராஜீவ்காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள   தலைமை செயலகத்தில் மரம் விழுந்த விபத்தில் உயிரிழந்த காவலர் கவிதாவின் உடலுக்கு  மலர் மாலை வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின அஞ்சலி செலுத்தினார்  அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன் உள்ளிட்டோர்களும் வந்து அஞ்சலி செலுத்தினர்.


 பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி


10இலட்சம் அறிவிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 15இலட்சம் அறிவித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்


காயமடைந்த காவலர் முருகன், தீயணைப்பு வீரர் செந்தில்குமாருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு.


நிருபர் பாலாஜி