ஒரு வரிச் செய்தி சுருக்கம்
    🙏தீபாவளியை முன்னிட்டு குஜராத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையிலும், ராஜஸ்தானின் பார்மர் செக்டாரிலும் எல்லைப் பாதுகாப்புப் படையும், பாக் ரேஞ்சர்களும் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.


     🙏எல்லையில் ராணுவ வீரர்கள் உள்ளதாலேயே 130 கோடி மக்களும் நிம்மதியாக உள்ளனர் - பிரதமர் மோடி


 பண்டிகைகளை மகிழ்ச்சியாக கொண்டாட ராணுவ வீரர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை


 ராணுவ வீரர்களின் தியாகம் என்றென்றும் நினைவுகூரத்தக்கது
     💢💥கொரோனா மாத்திரை - பிரிட்டன் அனுமதி*


 உலகிலேயே முதன் முறையாக கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மாத்திரை மருந்துக்கு பிரிட்டன் அரசு அனுமதி*


மெர்க் நிறுவனம் தயாரித்துள்ள மால்னுபிரவிர் என்ற மாத்திரை மருந்துக்கு பிரிட்டன் அரசு அங்கீகாரம்.      🙏 தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்வு!


தாம்பரத்துடன் பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது      💢💥விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 10 வயது சிறுமி சடலமாக மீட்பு - தீபாவளியை ஒட்டி தாய் மற்றும் உறவினருடன் குளிக்க வந்தபோது உயிரிழந்த பரிதாபம்


      💢💥தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கல்லாறு பகுதிக்கு குளிக்கச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் தவிப்பு


வழியில் இரண்டு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் திரும்ப முடியவில்லை; தீயணைப்புத்துறையினர் சிக்கியவர்களை மீட்க முயற்சி

 

     👮💢பசும்பொன் குருபூஜை அன்று கமுதி அருகே காவல்துறை, அரசு வாகனங்களின் மீது ஏறி நடனமாடிய 3 கல்லூரி மாணவர்கள் உள்பட 5 இளைஞர்கள் கைது செய்து சிறையில் அடைப்பு


      🙏செர்பியாவில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்தியாவின் ஆகாஷ் குமார் வெண்கல பதக்கம் வென்றார்


      💢💥விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்துள்ள நல்லம்பாக்கம் கிராமத்தில்  வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முத்துலட்சுமி (51) என்ற பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு - போலீசார் விசாரணை


     💢💥அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலி*


ராமநாதபுரம் மாவட்டம் காரி கூட்டம் அருகே பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலி


விபத்தில் கேணி கரையைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன், ராமநாதபுரத்தை சேர்ந்த பிரகாஷ் ஆகியோர் பலி.


     🙏எத்தனை ஜென்மம் இருந்தாலும் பட்டா கிடைக்காது; ரேசன் அட்டைக்கு நடக்க வேண்டியிருக்கும், முதலமைச்சரின் ஆதரவினால் எல்லாம் கிடைத்துள்ளது, இப்பொழுது சந்தோசமாக இருக்கிறது" 


- முதலமைச்சருக்கு அஸ்வினி நன்றிi


     🙏நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த பிரதமர் மோடிக்கு நன்றி - அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்


 நிருபர் பாலாஜி