👉 தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக பணிபுரிந்து வரும் ஜெயராம் திண்டுக்கல் அசோக் நகர் வீட்டில் 12 மணி நேர லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை.
👉கடந்த 2017ம் ஆண்டில் இருந்து 4.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது உத்தரப்பிரதேச அரசு - யோகி ஆதித்யநாத்
🙏புனித் ராஜ்குமாரின் கண்களால் நான்கு பேருக்கு கிடைத்த பார்வை
'மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் இரண்டு கண்கள் மூலம், நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ளது.
💢💥சீனாவிலிருந்து வெளியேறுவதாக யாகூ நிறுவனம் அறிவிப்பு.
போட்டி சூழல் மற்றும் சட்டச் சூழல் ஆகியவற்றால் வெளியறுவதாக தெரிவித்துள்ளது.
👮💢சென்னை திருமங்கலத்தில் தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் காவல்துறை அதிகாரிகள் 6 பேர் பணியிடை நீக்கம்
👉தமிழ்நாட்டில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்
💢💥நைஜீரியாவில் 22 அடுக்குமாடி கட்டடம் சரிந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு
💢💥மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 4 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் அபார வெற்றி
எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் அனைவரும் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேலான வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர்.
👮👉வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம்
- டிஜிபி சைலேந்திரபாபு
💢💥திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் நவ.9ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
🙏ஜெய் பீம்’ பார்த்தேன்: கண்கள் குளமானது - கமல்ஹாசன்
👉இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 3 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலை
அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஆளும் பாஜக தரப்பு அதிர்ச்சி
💢💥ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான
நிலுவைத் தொகை ரூ.1,178 கோடி
*உடனடியாக விடுவிக்க பிரதமர் மோடிக்கு
முதல்வர் ஸ்டாலின் கடிதம்
* முதல்வர் ஸ்டாலின் கடிதத்தை நிதியமைச்சர் நிர்மலாவிடம் வழங்கினார் டி.ஆர்.பாலு
நிருபர் முருகேசன்
😷முக கவசம் உயிர்க்கவசம்😷