உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதலமைச்சர்

 


        உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு


 மதுரை மாவட்டம்  பாப்பாபட்டி கிராம சபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

 

திமுக கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது ; அதை நிச்சயமாக நிறைவேற்றியே தீருவோம்


என்னை நம்பர் 1 முதல்வர் என்று சொல்கிறார்கள், அதில் எனக்கு பெருமை இல்லை ; தமிழ்நாடு நம்பர் 1 மாநிலம் என்று சொல்லும் நாள் வரும், அப்போதுதான் எனக்கு பெருமை’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 


ஒற்றுமை இல்லாத ஊரில் சமத்துவம் வளராது; கடைக்கோடி மனிதனின் குரலையும் கேட்பேன், திமுக அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் 202ஐ நிறைவேற்றியுள்ளோம்,  தமிழ்நாட்டில் வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையை உருவாக்க பாடுபடுவேன்


'உங்கள் உள்ளங்களை கவர்ந்த உதயசந்திரனும் இங்கே இருக்கிறார்’


பாப்பப்பட்டி கிராம சபைக் கூட்டத்தில் தனது தனிச்செயலரும் பாப்பப்பட்டியில் தேர்தல் நடத்த காரணமான முன்னாள் ஆட்சியருமான உதயசந்திரனை பெருமைப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்..



 பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில், கே.நாட்டப்பட்டி கிராமத்தில், வயலில் இறங்கி நாற்று நடவு செய்து கொண்டிருந்த விவசாயப் பெண்களிடம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.