கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா சாலையில் சிலை முதல்வர் அறிவிப்பு

 


          சென்னை அண்ணாசாலையில் ஏதாவது ஒரு இடத்தில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும் என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 


சட்டவல்லுநர்களை ஆலோசித்து அண்ணாசாலையில் கலைஞருக்கு சிலை வைக்கப்படும் என கூறினார்.  தி.க.தலைவர் வீரமணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் பேரவையில் முதல்வர் அறிவித்தார்.


"குடிசை மாற்று வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என பெயர் மாற்றப்படும்"


- சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.


        💥அதிமுக ஆட்சியில் நடந்த 2 உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.64 ஆயிரம் கோடி மதிப்பிலான 11 மின்துறை திட்டங்கள் கைவிடப்பட்டன: அமைச்சர் தங்கம் தென்னரசு பரபரப்பு தகவல்கள்


        💥சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்வு


தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 900 ரூபாயை தாண்டியது


ஒரே ஆண்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 285 ரூபாய் உயர்வு


வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 75 ரூபாய் உயர்வு

 

       💢💥சென்னை மற்றும் இதர நகரங்களில் 601 திட்டப் பகுதிகளில் 28,247 அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க தொழில்நுட்பக் குழு பரிந்துரை செய்துள்ளது”

 

- குடிசை மாற்று வாரியம் கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்.


        💦💥பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களிடம் பேசினேன்; பள்ளிக்கு சென்று நண்பர்களை சந்தித்ததில் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்”


-பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.


       💦💥 பட்டினப்பாக்கத்தில் மிகப் பெரிய வணிக வளாகம் கட்ட திட்டம்


சட்டப்பேரவையில் வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துச்சாமி அறிவிப்பு


சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளின் உதவியுடன் 25 ஏக்கரில் வணிக வளாகம் அமைக்கப்படும் - வீட்டுவசதித்துறை


 💥பழைய மகாபலிபுரம் சாலை யையும் கிழக்கு கடற்கரை சாலையில் இணைக்க 180 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட சுழல் சாலை வகை மேம்பாலம் கட்டப்படும்

-அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு