இன்றைய தினம் மத்யாஷ்டமி... ஏன் சிறப்பு? அறிந்து கொள்வோம்

 


          இன்றைய தினம் மத்யாஷ்டமி... ஏன் சிறப்பு? 


தர்ப்பணம் செய்து முன்னோர்களின் ஆசியை பெற்றிடுங்கள்...!!


மத்யாஷ்டமி தினத்தின் முக்கியத்துவங்களும்... அதன் பலன்களும்...!!


🙏 மகாளய பட்சத்தின் பதினைந்து நாட்களும் பித்ரு வழிபாட்டுக்கு உகந்தவை. 



இந்தப் பதினைந்து நாட்களும் தினமும் தர்ப்பணம் செய்து வழிபடுவது சிறந்தது. 



குறைந்த பட்சம் இரண்டு தினங்களாவது தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம் என்கின்றனர் முன்னோர்கள். 


🙏 கட்டாயம் மகாளய அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு செய்ய வேண்டும். அது தவிர மீதமுள்ள நாட்களில் ஏதேனும் ஒருநாள் நாம் தர்ப்பணம் முதலிய வழிபாடு செய்ய வேண்டும். அதற்கு உரிய நாட்களாக, மகாபரணி, மத்யாஷ்டமி, அவிதவாநவமி, மஹாவியதீபாதம், சந்நியஸ்தமாளயம், கஜச்சக்ஷமாளயம், மகாளய அமாவாசை ஆகிய நாட்களை வகுத்துத் தந்திருக்கிறார்கள். 


மத்யாஷ்டமி :


🙏 இந்த ஆண்டு மத்யாஷ்டமி நாளை (29.09.2021) புதன்கிழமை வருகிறது. மகாளய பட்சத்தின் 15 நாட்களில் நடுநாயகமாகத் திகழ்வது இந்த மத்யாஷ்டமி. 


எனவே இந்த நாள் மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. 


🙏 மத்யாஷ்டமி அன்று தர்ப்பணம் முதலான முன்னோர் வழிபாடுகளைச் செய்தால் மகாளய பட்சம் முழுவதும் முன்னோர் வழிபாடு செய்த பலன் கிடைக்கும். 


மேலும் அறிவாற்றல் பெருகி காரியங்களில் வெற்றி கிடைக்கும். 


🙏 இந்த மத்யாஷ்டமி தினத்தில் நம் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதன் மூலம் நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான சமயோசித புத்தி மற்றும் அறிவாற்றல் அதிகமாகும் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கையாகும்.


 எனவே காரியத்தடைகள் விலக கட்டாயம் கடைபிடிக்க வேண்டியது மத்யாஷ்டமி வழிபாடு.


விரதங்களில் முதன்மையானதும், மகிமை வாய்ந்ததுமாக கருதப்படுவது ஏகாதசி விரதமாகும். 


ஆண்டிற்கு 25 ஏகாதசிகள் வருகின்றன. 


அந்த ஏகாதசிகளின் பெயர்கள் என்னென்ன? அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன? 


👉மகாளய பட்சத்தில் உள்ள நாட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தது. 



மகாபரணி தந்தை, தாய் இறந்த திதி எதுவென்று அறியாதவர்கள் வழிபாடு செய்ய வேண்டிய நாள். 


👉முறையாக முன்னோர் வழிபாடு செய்யாதவர்கள், வழிபாடு செய்ய உகந்த நாள் மத்யாஷ்டமி. 


👉குடும்ப சுமங்கலிகளை வழிபட உகந்த தினம் அவிதவாநவமி. 


👉27 யோகங்களில் ஒன்றான வியதீபாத யோகம் மகாளய பட்சத்தின்போது ஏற்பட்டால் அது மகாவியதீபாத யோகம் என்று அழைக்கப்படும். இந்த நாளில் செய்யப்படும் பித்ருவழிபாடு சகல நன்மைகளையும் பெற்றுத்தரும்.


🙏 தற்கொலை போன்ற துர்மரணத்தால் மறைந்தவர்களுக்கும், தொடர்ந்து பித்ரு கடன்களை செய்யாதவர்களுக்கும் தில ஹோமம் செய்து நற்கதி ஏற்படுத்த இந்த நாள் ஏற்றதாகச் சொல்லப்படுகிறது.


🙏 எனவே, மத்யாஷ்டமி என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால், லாபம் நமக்கு மட்டுமல்ல... நம் தலைமுறைக்கும் சேர்த்து தான். மகாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும், நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும் என்பது நிச்சயம்.


 தொகுப்பு


மோகனா  செல்வராஜ்


😷முக கவசம் உயிர்க்கவசம்😷