தமிழ்நாட்டின் முதல் மரபணு பகுப்பாய்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

 


           சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் ₹4 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட, தமிழ்நாட்டின் முதல் மரபணு பகுப்பாய்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


இந்தியாவில் வேறு எங்கும் மாநில அரசினால் மரபணு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்கப்பட்டதில்லை; முதல் முதலாக தமிழ்நாடு அரசால் தமிழ்நாட்டில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டிகொரோனா சோதனை மாதிரிகளை பெங்களூருக்கு அனுப்பி அதன் உருமாற்றம் குறித்து ஆய்வு செய்ய, ஒரு சோதனைக்கு ₹5000 செலவானது. இதனால் தமிழ்நாட்டிலேயே இந்த ஆய்வகம் அமைக்க திட்டமிட்டு தற்போது அமைக்கப்பட்டுள்ளது.


 இந்தியாவிலேயே முதன்முறையாக மாநில அரசின் மரபணு பகுப்பாய்வு கூடம் சென்னையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது.தொடர்ந்து 91 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டது... - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.