தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

 


       தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் அக்.6 மற்றும் 9-ம் தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் -  மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு*


 காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், திருப்பத்தூர்,ராணிப்பேட்டை, விழுப்புரம் , கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில்  ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி நடைபெறும் என மாவட்ட தேர்தல் ஆணையம் அறிவிப்பு


 ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு!


கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்க அனுமதி.


 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு - தேர்தல் அட்டவணையை வெளியிட்டார்.  மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்.


 கொரோனா விதிமுறைகள் பின்பற்றி தேர்தல் நடத்தப்படும்; தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” - மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்.


 வாக்குப்பதிவு நடைமுறைகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும்.


 அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் - மாநில தேர்தல் ஆணையர்வரும் 15ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்


காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்


 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு , மனு தாக்கல் தொடக்கம் - செப் 15 


வேட்புமனு தாக்கல் நிறைவு - செப் 22 


வேட்புமனு ஆய்வு - செப். 23 


திரும்ப பெறுதல் - செப். 25 


முதல் கட்ட தேர்தல் - அக் 6 


2 வது கட்ட தேர்தல் -  அக். 9 


வாக்கு எண்ணிக்கை - அக் 12


ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு!*


ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு


😷முகக் கவசம் உயிர்க்கவசம்😷