செய்திகள் சுருக்கம்... உண்மை செய்திகள்

 


      👉 அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் மூலம் காலிப்பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுகிறது; யாரையும் பணியில் இருந்து நீக்கிவிட்டு நியமனங்கள் மேற்கொள்ளப்படுவது இல்லை.

 

- திமுக எம்.பி கனிமொழி

                      **************

         👉 திருவள்ளூர்: ரூ.5,000 லஞ்சம் பெற்ற வழக்கில் திருவள்ளூர் ஆர்டிஓ அலுவலக கண்காணிப்பாளருக்கு 4 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. சிற்றந்து உரிமம் புதுபிக்க லஞ்சம் பெற்ற விஜயகுமாருக்கு தண்டனை விதித்து திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

                      **************

       👉காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல், மீரா மிதுன் மாற்றி மாற்றி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை மீரா மிதுனை காவலில் எடுத்து, மனநல ஆலோசகரை உடன் வைத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். போலீசாரைச் கண்டதும் நடிகை மீரா மிதுன் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்வதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

                       **************

      👉 முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவுக்கு சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நாசர் கூறினார். திலுவள்ளூர் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த பின் அமைச்சர் பேட்டியளித்தார்.

                   **************

       👉திமுகவின் 100 நாள் ஆட்சி; நன்றாகவும் நடுநிலையோடும் உள்ளது" - பிரேமலதா விஜயகாந்த்.

                     **************

       👉அரசு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற கலைஞர்களை பயன்படுத்த அனைத்து துறை அமைச்சர்களிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னையில் இயல்,இசை,நாடகமன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர் பேட்டி.

                   **************

      👉 காங்கிரஸ் அரசு வெளியிட்ட எண்ணெய் நிறுவன பத்திரங்கள் காரணமாக, பாஜக அரசுக்கு சுமை அதிகமாகிவிட்டது; அதனால் எங்களால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியவில்லை” 


-நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

                      **************

       👉அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்; நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன். 


-கமல்ஹாசன்,மநீம தலைவர்.

                 **************

       👉விராலிமலையைச் சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகி ஜேசுராஜ், அவரது மனைவி அனுஷா ஆகியோர் சத்துணவுத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 7 பேரிடம் ரூ.18 லட்சம் மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார்.

                   **************