இன்றைய ராசிபலன்

 



    இ‌ன்றைய (09-07-2021) ராசி பலன்கள்


மேஷம்

ஜூலை 09, 2021


உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பொறுமையுடன் செயல்பட்டு எண்ணிய காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். அவ்வப்போது உங்களின் மீதான சிறு சிறு வதந்திகள் ஏற்பட்டு நீங்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அஸ்வினி : ஆதரவான நாள்.


பரணி : வெற்றி கிடைக்கும்.


கிருத்திகை : அனுகூலமான நாள்.

-


ரிஷபம்

ஜூலை 09, 2021


தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கான தருணங்கள் சாதகமாக அமையும். நெருக்கமான நபர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். புதுவிதமான கற்பனை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



கிருத்திகை : சேமிப்புகள் அதிகரிக்கும்.


ரோகிணி : சாதகமான நாள்.


மிருகசீரிஷம் : மனம் மகிழ்வீர்கள்.



மிதுனம்

ஜூலை 09, 2021


மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மற்றவர்களின் பொருட்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் மீது சந்தேக எண்ணங்களை விடுத்து சூழ்நிலைக்கேற்ப செயல்படுவது நல்லது. வெளியூர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மாணவர்களுக்கு நினைவாற்றலில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்



மிருகசீரிஷம் : ஈர்ப்பு அதிகரிக்கும்.


திருவாதிரை : சிந்தனைகள் மேம்படும்.


புனர்பூசம் : மந்தமான நாள்.



கடகம்

ஜூலை 09, 2021


நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சேமிப்புகள் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களின் குணநலன்களை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். எதிர்பாராத சிறு வாய்ப்புகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


பூசம் : முதலீடுகள் அதிகரிக்கும்.


ஆயில்யம் : புதுமையான நாள்.



சிம்மம்

ஜூலை 09, 2021


நண்பர்களின் வருகைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வேளாண்மை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சிலருக்கு கிடைக்கும். மூத்த சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மகம் : மகிழ்ச்சியான நாள்.


பூரம் : மரியாதைகள் அதிகரிக்கும்.


உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.



கன்னி

ஜூலை 09, 2021


உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவமும், மதிப்புகளும் ஏற்படும். மனைவி வழி உறவினர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் மாற்றமான சிந்தனைகள் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



உத்திரம் : மாற்றங்கள் உண்டாகும்.


அஸ்தம் : மதிப்புகள் அதிகரிக்கும்.


சித்திரை : திருப்தியான நாள்.



துலாம்

ஜூலை 09, 2021


நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். தடைபட்டுவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். மனைவியுடன் சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். கற்றல் தொடர்பான புதிய பயிற்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : நுணுக்கங்களை அறிவீர்கள்.


சுவாதி : நம்பிக்கை அதிகரிக்கும்.


விசாகம் : இன்னல்கள் குறையும்.



விருச்சிகம்

ஜூலை 09, 2021


வாகனம் தொடர்பான பயணங்களில் நிதானம் வேண்டும். கடன் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். மற்றவர்களை அவமதிக்கும் போக்கினை குறைத்துக்கொள்வது நல்லது. சடங்கு, சம்பிரதாயம் பற்றிய அஞ்ஞான சிந்தனைகள் மனதில் மேம்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபடுவீர்கள். இணையம் சார்ந்த பணிகள் மற்றும் முதலீடுகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



விசாகம் : நிதானம் வேண்டும்.


அனுஷம் : அஞ்ஞானம் அதிகரிக்கும்.


கேட்டை : பொறுமை வேண்டும்.



தனுசு

ஜூலை 09, 2021


ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கூட்டு வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். கடன் தொடர்பாக எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த நெருக்கம் அதிகரிக்கும். மலர்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : முன்னேற்றமான நாள்.


பூராடம் : உதவிகள் கிடைக்கும்.


உத்திராடம் : நெருக்கம் அதிகரிக்கும்.



மகரம்

ஜூலை 09, 2021


பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் சோர்வு ஏற்படும். குழந்தைகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் அமையும். சேவை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகளின் மூலம் சிறு சிறு இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். வாகனம் தொடர்பான பயணங்களில் விவேகம் அவசியமாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : சோர்வான நாள்.


திருவோணம் : இன்னல்கள் குறையும்.


அவிட்டம் : விவேகம் வேண்டும்.



கும்பம்

ஜூலை 09, 2021


மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். நேரத்திற்கு உணவினை சாப்பிடுவது நல்லது. தெளிவான சிந்தனைகளின் மூலம் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். அரசு தொடர்பான பணிகளில் இழுபறிகள் குறையும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அவிட்டம் : எதிர்ப்புகள் குறையும்.


சதயம் : சிந்தனைகள் மேம்படும்.


பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.



மீனம்

ஜூலை 09, 2021


உத்தியோகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். மகிழ்ச்சி தரும் இடங்களுக்கு சென்று வருவீர்கள். விவசாயம் தொடர்பான பணிகளில் பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். முயற்சிக்கேற்ப பாராட்டுகள் கிடைக்கும். வாகனம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



பூரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.


உத்திரட்டாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.


ரேவதி : மேன்மை உண்டாகும்.


                        *சுபம்*


  வடிவமைப்பு திருமதி மோகனா செல்வராஜ்