நடிகர் சிவக்குமார் குடும்பம் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1கோடி நிவாரணம்
நடிகர் சிவகுமார், அவரது மகன்கள் நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.1 கோடி நிவாரண நிதியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் (12-05-21) அன்று நேரில் வழங்கினர்.
செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், 'மக்களை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உடனே காப்பாற்றியாக வேண்டும். அதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். எங்களால் முடிந்த சிறு உதவியாக 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளோம்.
மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டிக்கொள்ளுங்கள். தமிழகத்தில் தமிழ் படித்தவருக்கு வேலை கொடுக்க வேண்டும். கலைஞரை 40 வருடங்களாக சந்தித்து இருக்கிறேன். இப்போது அவரது அரசியல் வாரிசை சந்தித்ததில் அளவற்ற மகிழ்ச்சி' என்று தெரிவித்தார்.
நிருபர் பாலாஜி