இரு வரி செய்திகள்

 



👺கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி: இந்தியாவிற்கான தனது பயணத்தை ரத்து செய்தார் ஜப்பான் பிரதமர் சுகா

மோசமான சூழல் காரணமாக 

முன்னதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது


👺 மகாராஷ்ட்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் வினியோகம் பாதிக்கப்பட்டதால் 11 நோயாளிகள் உயிரிழப்பு


👺நாசிக் மருத்துவமனை ஆக்சிஜன் டேங்கில் கசிவு ஏற்பட்டதால் நோயாளிகளுக்கான ஆக்சிஜன் வினியோகம் பாதிப்பு


👺மறைந்த நடிகர் விவேக் விட்டுச்சென்ற 1 கோடி மரம் நடும் பணியை திமுக மேற்கொள்ளும்


திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி அறிவிப்பு


  👺 வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு 

தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயிலில் ஏப்ரல்  29ம் தேதி கும்பாபிஷேகம்


👺மும்பை: இந்திராணி முகர்ஜி உள்பட 38 கைதிகளுக்கு கரோனா


👺அலங்காநல்லூர், #பாலமேட்டில் சூறாவளி காற்றுடன் #கனமழை 300 ஏக்கர் பப்பாளி, வாழை, கொய்யா மரங்கள் நாசம்-உரிய #இழப்பீடு வழங்க கோரிக்கை


👺திருச்சி மண்டலத்திற்கு 45,000 #கோவிஷீல்டு தடுப்பூசிகளை பொது #சுகாதாரத்துறை வழங்கியது.


👺கொரோனா தடுப்பூசி விலை உயர்வு: மாநிலங்களுக்கு ரூ.400, தனியாருக்கு ரூ.600, மத்திய அரசுக்கு ரூ.150


👺கடந்த ஆண்டு, கோவிட் பரவல் தொடங்கியபோது, உத்தரபிரதேசத்தில் 8,51,620 பேருக்கு நோய் பாதித்து, 9,830 பேர் உயிரிழந்தனர். நாட்டின் மற்ற மாநிலங்களை கணக்கில் கொள்ளும்போது இது மோசமாகத் தெரியவில்லை என்று நினைத்த நிலையில், இந்த இரண்டாம் அலை, அம்மாநிலத்தை உலுக்கியுள்ளது.


👺ஈஸ்டர் தாக்குதலின் 2ம் வருட பூர்த்தியை முன்னிட்டு, தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து, இலங்கை முழுவதும் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளர்.


👺ஆப்ரிக்க - அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் கடந்த ஆண்டு மின்னியாபோலிஸ் நகரத்தில் கைது செய்ய்யப்பட்டபோது உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் காவல் அதிகாரி குற்றவாளி என்று இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.


👺கூகுள் எர்த்தில் டைம் லேப்ஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி, கடந்த காலத்தில் புவி எப்படி இருந்தது என்று பார்க்கலாம். மனிதர்கள் இந்தப் புவியை எப்படி மாற்றியமைத்திருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளலாம்.


👺கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்தோடு வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.


👺திட்டமிட்டபடி மே2ல் ஓட்டு எண்ணிக்கை: சத்யபிரதா சாஹூ


👺கோவாக்சின் உருமாறிய கொரோனாவையும் எதிர்கொள்கிறது: ஐசிஎம்ஆர்


👺கோவையில் 1,700 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது


👺ஏப்.,30 வரை இந்தியா - இங்கிலாந்து விமான சேவை நிறுத்தம்: ஏர் இந்தியா


👺தோனி பெற்றோருக்கு கொரோனா


👺டில்லியில் கடுமையான ஆக்சிஜன் நெருக்கடி தொடர்கிறது: கெஜ்ரிவால்


👺இந்தியாவில் ஒரேநாளில் 2,023 பேர் கொரோனாவுக்கு பலி