சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண்கள் அனைவருக்கும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டில் பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். பாலின நீதியை மேம்படுத்தவும், ஆண், பெண், இடையேயான சமத்துவமின்மையை அகற்ற வேண்டும் என கூறினார்.
__________________________
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண்கள் அனைவருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தங்களின் வாழ்வியலில் பல்வேறு சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்ளும் அனைத்து மகளிருக்கும் அன்பான மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, பெண்கள் நலத்திட்டங்களை அம்மா வழியில் தொடர்ந்து செயல்படுத்தி, பெண்கள் பாதுகாப்பை என்றும் உறுதி செய்வேன் என உறுதியளிக்கிறேன் என கூறினார்.
__________________________
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார். மு.க ஸ்டாலின் கூறியிருப்பதாவது: -