👉 வரும் 9ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வருகிறார்.
__________________
👉 தென்தமிழக மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
______________________
👉 வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி குறைந்ததால் சன்பிளவர் ஆயில் லிட்டர் ரூ.135ஆக அதிகரித்துள்ளது. ஒரு ஆண்டில் 90 சதவீதம் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
_____________________
👉 மார்ச் 8 முதல் 11 வரை ஆதியோகி, தியானலிங்கம் மூடல்
____________________________
👉 ஈரானில் பயணிகள் விமானம் கடத்த திட்டமிட்டிருந்த சதியை இஸ்லாமியப் புரட்சிகர காவல்படையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
_______________________
👉 நியு சிலாந்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளது.
__________________________
👉 வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள OFFICE ATTENDANTS பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
________________________
👉 முதல்வர் பழனிசாமி அறிவித்தபடி சி.ஏ.ஏ., என்.ஆர்.சி.க்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
___________________________
👉 மார்ச் 8ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என வழக்கறிஞர் சங்கம் அறிவித்துள்ளது.
_____________________
👉 ஆந்திராவில் அரசு பள்ளிகளில் படிக்கும் 7 முதல் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி துவக்கி வைக்க உள்ளார்.
_________________________
👉 இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 365 ரன்னில் ஆட்டமிழந்தது.
👉 இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
___________________
👉 கடலு}ர் சிப்காட்டில் தொழிற்பேட்டையால் ஏற்பட்ட சுற்றுச்சுழல் பாதிப்பு குறித்து ஆராய 6 பேர் கொண்ட குழுவை அமைத்து 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
__________________
👉 ஆப்பிள் நிறுவனம் ழுடுநுனு ரக டிஸ்ப்ளே கொண்ட ஐபேட் மற்றும் மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
_____________
👉 சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் சுற்றுச்சுழல் காக்க பசுமை தொட்டிகள் அமைக்கப்படுகின்றன. பசுமை தொட்டி திட்டம் அனைத்து மெட்ரோ நிலையங்களில் படிப்படியாக செயல் படுத்தப் பட உள்ளது.