இன்று ஒரு ஆன்மிக தகவல்

மணி அடிப்பதில் இவ்வளவு விஷயமா ?! மணி --- மணியான தகவல்

பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னால் மணி  அடித்தால், அந்த மணி சப்தம் கேட்டதும் வீட்டிலுள்ள துர் தேவதைகள் போன்றவை வெளியே ஓடிவிடும். 

துர்தேவதை, பேய், பிசாசு போன்றவைகளுக்கு மணி சப்தம் கேட்டால் பயம்; எனவே, ஓடி விடும். அதனால், மணியடித்து அவைகளை விரட்டி விட்டு பூஜையை ஆரம்பிப்பர்.  

ஒவ்வொரு நாளும் ஏன் இப்படி அடிக்க வேண்டும் என்றால், ஓடிப்போன துர்தேவதைகள் இருட்டிய பின் மீண்டும் வந்து விடும்.

மறுநாள், மறுபடியும் மணியடித்து விரட்ட வேண்டும். அவை இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே என்றால், அவை இருக்குமிடத்தில் தேவதைகள் வரமாட்டார்கள்! 

அதனால், மணியடித்துதான் தினமும் பூஜையை ஆரம்பிப்பது வழக்கம்.  கிராமங்களில் கூட இந்த துர்தேவதைகள் சுற்றிக் கொண்டே இருக்கும். 

ஆலயங்களில் காலை, மாலை மணியடிக்கும் போது, இந்த சப்தம் கேட்டதும் அந்த துர்தேவதைகள் ஓடி விடும். மறுபடியும் எப்போது திரும்பி வரும் என்று யாரும் சொல்லவில்லை. இருந்தாலும், அவை வந்து விடும் என்று மட்டும் சொல்கின்றனர்.

மற்ற மாதங்களை விட மார்கழி மாதத்துக்கு சிறப்பு அதிகம். அந்த மாதம் முழுவதும் பகவானுக்கு உகந்த நாட்கள். அதனால், மார்கழி மாதத்தில் எல்லாரும் விடியற் காலையில் எழுந்து நீராடி, நெற்றிக்கிட்டு, தெய்வ பூஜையில் ஈடுபடுவர்; ஆலயங்களுக்குச் செல்வர். 

இம்மாதத்தில் தெய்வ வழிபாடு மும்முரமாக இருக்கும்.  கிராமங்கள் என்றில்லாமல் நகரங்களிலும் இப்படி நடக்கிறது. கிராமங்களில் மார்கழி மாதம் முழுவதும் பிரதி தினம் விடியற் காலையில் ஒவ்வொரு தெருவாக சங்கு ஊதிக் கொண்டும், மணியடித்துக் கொண்டும் வருவர். 

அதற்கென்று மணியடிப்பவர், சங்கு ஊதுகிறவர் உண்டு. அவர்கள் அதை தினமும் செய்வர்.  

இதனால், கிராமத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் துர்தேவதைகள் ஓடிவிடும். கிராமம் நோய் நொடி இல்லாமல் சுபிட்சமாக இருக்கும் என்று சொல்வர்.

🔔மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது.          

🔔மெதுவாக அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப் படுகிறது என்று அர்த்தம்.          

🔔கணகணவென்று அடித்தால் தூபம், தீபம் ஆகிறது என்று அர்த்தம்.      

🔔இரண்டு பக்கமும் விசேஷமாக அடித்தால் திருமஞ்சனம் நடக்கிறது என்று அர்த்தம்.    

🔔மெதுவாக அடித்தால் பகவான் அமுது செய்கிறான் என்று அர்த்தம்.         

🔔மணியின் தொனியை வைத்தே கோவிலில் என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாம்.       

🔔மணி அடிப்பதை மஹான்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.       

🔔மணியை வலது கையில் எடுத்து, இடது கையில் மாற்றிக்கொண்டு கற்பூர ஆரத்தித் தட்டை எடுக்க வேண்டும்.    

🔔பிறகு இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றிக் கொண்டு கீழே வைக்க வேண்டும்.    

🔔இடது கையால் மணியை எடுக்கவே கூடாது.       

🔔கண்டை என்பது சாமான்யமல்ல. அதில் பிரணவம் த்வனிக்கிறது. தேவதைகளை வரவழைக்கிறது. துஷ்ட ப்ரக்ருதிகளை ஓட்டுகிறது.      

🔔பகவானுக்கு அமுது காணும்போது நிசப்தமாக இருக்க வேண்டும். அமங்கலமான பேச்சுகள் காதில் விழக்கூடாது. மணி அடித்தால் அவை காதில் விழாது.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 

ஓம் நமசிவாய

மோகனா செல்வராஜ்