ஓ.பி.எஸ்.சிடம் ஏதோ திட்டம் இருக்கிறது - துரைமுருகன்


எங்கும் வராமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் ஓ.பி.எஸ்.சிடம் ஏதோ திட்டம் இருக்கிறது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைதியாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதைப் பார்த்தால் அவரிடம் ஏதோ திட்டம் இருக்கிறது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நான்கு ஆண்டு பிறகு சசிகலாவின் வருகை அதிமுகவில் என்ன நடக்கப்போவது என்று தெரியவில்லை. ஒருபக்கம் முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் சசிகலாவை 100 சதவீதம் அதிமுகவில் இணைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளனர். ஆனால், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மட்டும் சசிகலா குறித்து இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை, மவுனமாக இருந்து வருகிறார்.

இதனிடையே, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக திட்டமிட்ட சசிகலா, ஓபிஎஸ்சிடமிருந்து பதவி பறிக்கப்பட்டது. இதனால், ஓபிஎஸ் தர்மயுத்தம் என்ற பெயரில் மெரினாவில் தியானம் செய்ததை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.