செய்திகள்

 


நீண்ட போராட்டத்திற்கு பிறகு கிடைத்த இடஒதுக்கீட்டு கொள்கையை நிறைவேற்ற மறுப்பதும், அதற்கு எதிராக நடப்பதும், எரிமலையுடன் விளையாடுவதற்கு ஒப்பானது.- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

*************************
மத்திய அரசு விவசாயிகளுக்கானதோ, இளைஞர்களுக்கானதோ அல்ல. 4, 5 பெருமுதலாளிகள் நண்பர்கள் மட்டுமே அவர்களுக்கு கடவுளாக தெரிகின்றனர்.- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

********************

ராஜிவ் கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை விவகாரம் பாஜ, அதிமுக, ஆளுநர் இடையிலான கால்பந்து விளையாட்டு போல உள்ளது.
- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

***********************

நாட்டில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என பலதரப்பட்ட மதத்தினர் வாழ்ந்து வரும் நிலையில், மதசார்பற்ற கூட்டணிதான் தேவைப்படுகிறது. - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

************************

 அரசு போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்கிடவும், பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரவும் நிதிப்பற்றாக்குறையை போக்குவதற்கும் தமிழக அரசு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த வேண்டும். -ஜி.கே.வாசன்

*************************

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழுவை எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவித்துள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு: 

************************