சினிமா செய்திகள்

 


கே.ஜி.எஃப் -2 படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2018-ம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.பிரமாண்ட வெற்றியை பெற்ற இந்த திரைப்படம் பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெற்றியை கண்டது . தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் கே.ஜி.எஃப் -2 படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .கே.ஜி.எஃப் முதல் பாகத்திற்கான தமிழக உரிமையை விஷாலின் தயாரிப்பு நிறுவனம் வாங்கி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

                                   


நடிகர் தனுஷ் அடுத்ததாக மாரி பட இயக்குனரான பாலாஜி மோகன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் தனுஷ் நடிப்பில் கர்ணன்,ஜகமே தந்திரம் மற்றும் “அத்ராங்கே” என்ற பாலிவுட் படம் ஆகியவை ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது.தற்போது நடிகர் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் “D43” படத்தில் நடிக்க உள்ளார்.அதனை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் இரண்டு படங்களும்,,தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தினையும் தனது கைவசம் வைத்துள்ளார் தனுஷ்.

                                   

விக்ரம் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற இருமுகன திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நடிகர் விக்ரம் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற திரைப்படம் இருமுகன் . 

தற்போது இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .இந்தி ரீமேக்கையும் ஆனந்த் சங்கர் இயக்குவாரா அல்லது வேறு யாராவது இயக்குகிறாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும், மேலும் இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர் நடிகைகள் குறித்த விவரங்களும் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது . 

*************************

வசந்த பாலன் இயக்கும் அடுத்த படத்தில் பிக் பாஸ் மூலம் புகழ்பெற்ற சுரேஷ் சர்க்கரவர்த்தி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வசந்த பாலன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை தனது பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து தொடங்கிய அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஹீரோவாக கைதி, மாஸ்டர், அந்தகாரம் போன்ற படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளார்.

                                     


தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் மணிரத்னத்தின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த கண்ணன் ஜெயம் கொண்டான் எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

சமீபத்தில் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் ரீமேக் உரிமையை கண்ணன் வாங்கி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் இயக்க உள்ளதாக கூறப்பட்டது.

காரைக்குடியில் மார்ச் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.