விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் – எம்.பி. கனிமொழி பங்கேற்பு

 


திமுக சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கனிமொழி பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில  மாதங்களில் நடைபெற உள்ளது.

அதற்கான பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. அதன்படி, அண்மையில் அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி சேலத்தில் தனது முதல் தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.

திமுக சார்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில்  பிரச்சாரம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.அதன்படி நடைபெற்றும் வருகிறது.

இந்நிலையில் விடியலை நோக்கி_ஸ்டாலினின் குரல் பொதுக்கூட்டம் 18.01.2021.

 நாகர்கோவில் மாநகரம் நாகராஜா திடலில் நடைபெறுகிறது என்றும் இதில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி பங்கேற்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.