முக்கியச் செய்திகள்

 


சென்னையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று ஆய்வு செய்கிறார். ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, பெரியமேடு மருந்துசேமிப்பு கிடங்கையும் பார்வையிடுகிறார். செங்கல்பட்டிலுள்ள தடுப்பு மருந்து மையம், ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தையும் பார்வையிடுகிறார்.

_________________________________


புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து இன்று முதல்வர் நாராயணசாமி ஆளூநர் மாளிகையை முற்றுகையிடுகிறார். நாராயணசாமியுடன் அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். புதுச்சேரி அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு தடையாக உள்ளதாக கூறி கிரண்பேடியை திருப்பப் பெற வலியுறுத்தியுள்ளனர். ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து காங். கட்சியினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

________________________________

ஐ.நா. பாதுகாப்பில் குழுவில் 3 துணை அமைப்புகளுக்கு இந்தியா தலைமை தாங்கியுள்ளது. ஐநா பாதுகாப்பு குழுவின் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூா்த்தி தகவல் தெரிவித்தார். தலிபான்தடை, தீவிரவாத எதிர்ப்பு, லிபியா தடை குழுக்களுக்கு தலைமை தாங்கியுள்ளதாக கூறினார்.

_____________________________

சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசினார். சா்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் அடித்துள்ள 27-வது சதம் ஆகும்.

_________________________________